பக்கம் எண் :

சீறாப்புராணம்

1303


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சிறையாகப் பிடித்த அந்த அரசர்களைத் தங்களுக்கு முன்னாற் பொருந்தும்படி நடத்தித் தங்களது பெரிய சேனைகளெல்லாவற்றையும் ஒன்று சேர்த்துத் தாங்கள் கரைகண்ட வெவ்விய அந்த யுத்தத்தில் எக்காளங்களை முழங்கச்செய்து தாங்கள் தங்கிய பாசறைகளிற் போய்ச் சேர்ந்து சத்துராதிகளைத் தாக்கித் தகர்த்து மாண்டு போன தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அந்த யுத்தக்களத்தில் பொருந்திய பதினான்கு தலைவர்களையும் எடுத்து இனிமையோடுந் தொழுது அடக்கிவிட்டு இருந்தார்கள். அதன் பின்னர் சூரியனும் அஸ்தமித்தான்.

 

3565. விடிந்தபின் காலைக் கடன்கழித் திறசூல்

          விரைவினி லிபுனு மஸ்வூதைத்

     திடந்தரு மொழியா லழைத்தரு கிருத்தித்

          தீயவன பூசகு லென்போ

     னுடைந்தொழு கினனோ வலதிறந் தனனோ

          வூறுபட்டி டைந்தன னோவென்

     றிடந்தரும் பெரும்பா சறையினுங் களத்துந்

          தெரிந்திவண் வருகவென் றிசைத்தார்.

214

      (இ-ள்) சூரிய னுதயமான பின்னர் நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் காலைக் கடனாகிய சுபுகுத் தொழுகையைச் சஹாபாக்களோடுந் தொழுது முடித்து இபுனு மஸ்வூது றலியல்லாகு அன்கு அவர்களை வலிமையைத் தருகின்ற வார்த்தைகளைச் சொல்லி வேகத்தில் கூப்பிட்டுப் பக்கத்தில் இருக்கும்படி செய்து பொல்லாதவனான அந்த அபூஜகிலென்பவன் போரில் தளர்ந்து ஓடினானோ? அல்லது மாண்டானோ? காயப்பட்டுத் தகர்ந்தானோ? என்று விசாலமாகிய பெரிய பாசறைகளிலும் யுத்தக்களத்திலும் போய்ப் பார்த்துத் தெரிந்துகொண்டு இங்கு வாருங்களென்று சொன்னார்கள்.

 

3566. தூயவ னிறசூல் நபியினி துரைத்த

          சொல்லினைச் சிரசின் மேலேற்றிச்

     சீயமொத் தெழுந்து வரிப்புலி யனைய

          தீனவர் நால்வர்க ளுடனு

     மாயிரு விசும்பும் புவனமும் புகழார்

          மன்னவ ரிபுனு மஸ்வூது

     போயினர் பறவைப் பந்தரிற் கிடந்த

          பொங்குசெங் குருதிவெங் களத்தில்.

215

      (இ-ள்) பரிசுத்தனான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் தூதராகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது