பக்கம் எண் :

சீறாப்புராணம்

1304


இரண்டாம் பாகம்
 

முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு இனிமையோடுங் கூறிய வார்த்தைகளை மிகவும் பெருமை பொருந்திய வானலோகத்திலும் பூலோகத்திலுந் தங்களது கீர்த்தியானது தங்கப் பெற்ற அரசரான அவ்விபுனு மஸ்வூது றலியல்லாகு அன்கு அவர்கள் தங்கள் தலையின் மீது கொண்டு சிங்கத்தைப் போன்று எழும்பி இரேகைகளை யுடைய புலியை நிகர்த்த தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய நான்கு சஹாபாக்களோடும் பட்சிகளின் பந்தரிற் கிடந்த பொலியாநிற்குஞ் செந்நிறத்தைக் கொண்ட இரத்தத்தையுடைய வெவ்விய அந்த யுத்தக்களத்தில் போனார்கள்.

 

3567. மெய்யுழன் றிறந்து கிடந்தவ ரொருபால்

          விலாப்புடை திறந்தவ ரொருபாற்

     கையிழந் தருகிற் கிடந்தவ ரொருபாற்

          காற்றுணை யிழந்தவ ரொருபான்

     மையுறுஞ் சிரசற் றுறைந்தவ ரொருபான்

          மணிக்குடர் சரிந்தவ ரொருபா

     லெய்யும்வன் சரங்க டுளைத்திடக் குருதி

          யிழிந்திருந் திறந்தவ ரொருபால்.

216

      (இ-ள்) அவ்வாறு போன அந்த யுத்தக்களத்தில், தங்களது தேகங்களானவை சுழலப்பெற்று மடிந்து கிடந்தவர்கள் ஒரு பக்கம், விலாப்புறம் திறந்து மாண்டு கிடந்தவர்கள் ஒருபக்கம், தங்களது கரங்களை யிழந்து அக்கரங்களின் சமீபத்தில் மாண்டு கிடந்தவர்கள் ஒருபக்கம். இரு கால்களையுமிழந்து மாண்டு கிடந்தவர்கள் ஒருபக்கம். கருநிறத்தைப் பொருந்திய தலைகளறுந்து மாண்டு கிடந்தவர்கள் ஒருபக்கம். சிறு குடல்கள் வெளியிற் சாய்ந்து மாண்டு கிடந்தவர்கள் ஒருபக்கம். எய்யுகின்ற கொடிய அம்புகள் துவாரத்தைச் செய்ய அதனால் மிகவுமிரத்தஞ் சிந்தி மாண்டு கிடந்தவர்கள் ஒருபக்கம்.

 

3568. காலினை மடக்கி வாயித ழதுக்கிக்

          கவ்விவெள் ளெயிறுகளி லங்கப்

     பாலுறும் பரியின் குலம்பல வீழ்த்திப்

          படருயிர் விசும்பினிற் படுத்தி

     மாலுறுங் கரட மதமலை துளைக்கும்

          வயிரவொள் வேலினை யூன்றி

     மேலுறு மமருங் கொல்வனென் பவன்போ

          லிருந்தபல் வீரருங் கண்டார்.

217

      (இ-ள்) அன்றியும், தங்களது கால்களை மடக்கி வாயினிடத்துள்ள அதரங்களை அதுக்கிக் கடித்து வெண்ணிறத்தைக்