|
இரண்டாம் பாகம்
கொண்ட பற்கள் பிரகாசிக்கும்
வண்ணம் பக்கத்தில் தங்கிய பல குதிரைகளின் கூட்டங்களைப் பூமியில் விழும்படி செய்து அவைகளின்
உடலிற் பரவிய பிராணனை ஆகாயத்தின்கண் போகச்செய்து மயக்கத்தைப் பொருந்தின மதத்தையுடைய
யானைகளையுந் துளைக்கின்ற கூர்மை பொருந்திய ஒள்ளிய வேலாயுதத்தைப் பூமியின்மீது ஊன்றி வானலோகத்தி
லுறைந்த தேவர்களான மலாயிக்கத்துமார்களையுங் கொலை செய்வேனென்று சொல்லப்பட்டவனைப் போல்
தங்கிய பல வீரர்களைக் கண்டார்கள்.
3569.
குற்றுடைக் கதிர்வாள் குரகத
வயிற்றிற்
குழித்திடச் சாய்ந்தவண்
கிடந்த
முற்றிய முனையின் றிறத்தவ
னலகைக்
குலத்தொடு மருந்திட முரணிப்
பற்றிவெங் கரத்தா னிணக்குடர்
பிடுங்கும்
பான்மையொத் தனன்பல
நோக்கி
வெற்றிவெண் மலர்த்தார்
புயத்தவர் மகிழ்ந்து
திரிந்தனர் வீரவெங்
களத்தில்.
218
(இ-ள்) அன்றியும்,
வெள்ளிய புஷ்பங்களினாற் செய்யப்பட்ட வெற்றிமாலையைத் தரித்த தோள்களையுடைய அவர்கள் வலிமையைக்
கொண்ட வெவ்விய அந்த யுத்தக்களத்தில் பிரகாசத்தையுடைய சிறிய உடைவாளினால் குதிரையினது வயிற்றில்
குழியாக்க, அதனால் அங்குச் சரிந்து கிடந்த முதிர்ந்த துணிவைக் கொண்ட வலிமையையுடையவன், பைசாசங்கள்
தங்கள் கூட்டத்தோடும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு உண்பதற்கு வெவ்விய கைகளினால் பிடித்துக்
கொழுப்பைக் கொண்ட குடல்களைப் பிடுங்குகின்ற தன்மையை நிகர்த்தவனாகப் பார்த்துச் சந்தோஷித்துத்
திரிந்தார்கள்.
3570.
கந்துகக் கழுத்தை முரிதர
நெருக்கி
யெறிந்தவன் களனறக்
கவப்பட்
டிந்தெனு முகம்வா ளிலங்கிட
வவண்சாய்ந்
திருந்திறந் தவன்றனை
நோக்கி
நந்தின னலனென் றிகலனுஞ்
சுணங்கு
நடந்தருந் திடக்கடி தொதுங்கிச்
சிந்தையின் வெருவுற் றடிக்கடி
நோக்கித்
திரிவன பலவுங்கண்
டனரால்.
219
(இ-ள்) அன்றியும், குதிரைகளின்
கழுத்துகளை ஒடியும் வண்ணம் ஒடுக்கி வீசியவன் தனது கழுத்தானது அறக் கோளைப்பட்டுச் சந்திரனென்று
சொல்லும் வதனமும்
|