|
இரண்டாம் பாகம்
3582.
செல்வமுந் திறனும் புறத்தளித்
தனையே
தீவினைப் பயிர்விளைத்
தனையே
நல்வர மனைத்தும் பாழ்படுத்
தினையே
நடுநிலை தனைத்தவ றினையே
பல்பொருட் சுவனப் பதியிழந்
தனையே
பாழ்ங்குழிக் குடல்வளர்த்
தனையே
சொல்விதம் விடுத்துப்
பவமெடுத் தனையே
சூழ்வினை தனையறிந் திலையே.
231
(இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த
அவர்கள் அவனை நீ உனது ஆக்கத்தையும் வல்லமையையும் வெளியிற் கெடுத்தாய், பாவமாகிய பயிரை யுண்டாக்கினாய்,
நன்மை பொருந்திய வரங்க ளெல்லாவற்றையும் பாழாக்கினாய், நீதியில் நின்றும் வழுவினாய்,
அனேகப் பொருட்களையுடைய சொர்க்க லோகத்தை யிழந்தாய், பாழாகிய நரகக் குழிக்கு உனது தேகத்தை
வளரச் செய்தாய், வேதங்கள் கூறும் விதங்களை விட்டு பாவத்தைச் சுமந்தாய், உன்னை வந்து வளைந்த
ஊழை இன்னதென்று தெரிந்திலாய்.
3583.
வீரவெங் களிறே யடலரி யேறே
விறற்பெருஞ் சமர்க்குறும்
புலியே
பாரினிற் சிறந்த மக்கமா
நகரிற்
பரிவுறும் வீரருக்
கரசே
காரணக் குரிசின் முகம்மது
நபிதங்
கட்டுரை மறைக்கலி
மாவை
யீரமுற் றிசைந்து மனத்தினி
லிருத்தா
திடும்பெனு மிடர்விளைத்
தனையே.
232
(இ-ள்) வீரத்தைக் கொண்ட
வெவ்விய யானையானவனே! வலிமை பொருந்திய ஆண் சிங்கமானவனே! வெற்றியையுடைய பெரிய யுத்தத்திற்குப்
பொருந்திய புலியானவனே! இப்பூலோகத்தினிடத்து மேன்மையை யுடைய திரு மக்கமா நகரத்தின் மகிழ்ச்சியுற்ற
வீரர்களுக்கு அரசானவனே! காரணத்தைப் பெற்ற பெருமையிற் சிறந்தோரான நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது உறுதி வாக்கியத்தை
யுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னுங்
கலிமாவைக் கிருபையுற்றுப் பொருந்தி இதயத்தின்கண் இருக்கச் செய்யாமல் அகந்தையென்று
சொல்லுந் துன்பத்தை யுண்டாக்கினாய்.
|