பக்கம் எண் :

சீறாப்புராணம்

1324


இரண்டாம் பாகம்
 

சவீக்குப் படலம்

 

எழுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 

3608. ஆரண முறையின் தீனெறி பெருக்கி

          யகுமதுற் றுறையுமந் நாளிற்

     காருறை பொழில்சூழ் மதீனமா நகரிற்

          சூதரிற் கயினுக்கா கென்னும்

     வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து

          வேறொரு தலத்திடைப் புக்கிப்

     பாரினில் தீனுக் கிடர்நடத் தினர்க

          ளெனுமொழி பகர்தரக் கேட்டார்.

1

      (இ-ள்) அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் புறுக்கானுல் அலீமென்னும் வேத ஒழுங்கினால் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை வளர்த்துத் தங்கியிருக்கின்ற அந்தக் காலத்தில், மேகங்கள் தங்கிய சோலைகள் சூழ்ந்த திரு மதீனமா நகரத்திலுள்ள சூதஜாதியாரில்  கயினுக்காஹென்று சொல்லும் வீரர்களினது கூட்டமானது தாங்கள் கொடுத்த வார்த்தைப் பாட்டை முறித்து வேறொரு தானத்தின்கண் போய்ச் சேர்ந்து இப் பூமியில் தீனுல் இஸ்லா மென்னும் நம் மார்க்கத்திற்குத் துன்பத்தைச் செய்தார்களென்று கூறும் வார்த்தையைச் சொல்லக் காதுகளினாற் கேள்வியுற்றார்கள்.

 

3609. நாயகர் செவியிற் புகுதலுந் தலைமை

          நண்பருங் கடுவிசைப் பரியுஞ்

     சாயகக் சிலைக்கை வீரருஞ் சூழத்

          தடக்கதிர் வேலெடுத் தேந்திப்

     போய வருறைந்த பதியினை வளைந்து

          புரிசைக டுகளெழப் படுத்தி

     மாயவன் காபி ரெவர்களு நடுங்க

          மண்கொளா விடுக்கண்செய் தனரால்.

2

      (இ-ள்) நமது நாயகரான நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது காதுகளில் அவ்வாறு கூறிய வார்த்தைகள் நுழைந்த மாத்திரத்தில், தலைமைத்தனத்தை யுடைய தோழர்களான நான்கு யார்களும் அம்பைக் கொண்ட வில்லைத் தாங்கிய கையையுடைய