இரண்டாம் பாகம்
வீரர்களான அசுஹாபி மார்களும்,
கொடிய வேகத்தையுடைய குதிரைகளுந் தங்களை வளையும் வண்ணம் பெரிய பிரகாசத்தையுடைய வேலாயுதத்தைக்
கையில் தாங்கிச் சென்று பிரகாசத்தையுடைய வேலாயுதத்தைக் கையில் தாங்கிச் சென்று அந்தக்
கயினுக்காஹென்னுங் கூட்டத்தார்கள் தங்கிய ஊரைச் சூழ்ந்து அவ்வூரினது கோட்டை மதில்களைத்
தூளாக எழும்படி செய்து வஞ்சகத்தைக் கொண்ட கொடிய காபிர்களனைவரும் பதறும் வண்ணம் இவ்வுலகங்
கொள்ளாத துன்பங்களைச் செய்தார்கள்.
3610. பொருளெனப் படுத லியாவையுங்
கவர்ந்து
புறம்படர்க் கயினுக்கா
கென்னும்
விரிபெருங் கூட்டத் தவரினை
யுபைசேய்
விறல்பெறு மப்துல்லா
விடத்திற்
பரிவுறச் சாட்டிக் கொடுத்து
விட்டதற்பின்
பண்புறு மதீனமா நகரின்
மருமல ரணிந்த தீனவர் சூழ
வந்தனர் முகம்மது நபியே.
3
(இ-ள்) அவ்வாறு செய்த
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்
பொருளென்று சொல்லப்படுவனவாகிய எல்லாவற்றையுங் கொள்ளை கொண்டு தங்களிருப்பிடத்தை விட்டு
வெளியிற் சென்ற கயினுக்காஹென்று சொல்லும் விரிந்த பெரிய கூட்டத்தையுடைய அவர்களை உபையென்பவரது
புதல்வரான வெற்றியைப் பெற்ற அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்களிடத்தில் மகிழ்ச்சியுறும்
வண்ணஞ் சாட்டிக் கொடுத்து விட்டு அதன் பின் வாசனை தங்கிய புஷ்பங்களினாற் செய்யப்பட்ட
மாலையைத் தரித்த தோள்களையுடைய தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய சஹாபாக்கள்
சூழும் வண்ணம் தகுதி பொருந்திய திரு மதீனமா நகரத்தின்கண் வந்தார்கள்.
3611.
கோதுறுங் கயினுக் காகெனு
மவர்கள்
கூட்டத்தின் காரண மாகக்
காதிய நசுறா னிகளெகூ திகளாங்
காபிர்க ளுடன்படக்
கலப்ப
வோதிய மறையி னுண்மையென்
றுரைக்கு
முறவுகள் வேண்டலி ரென்ன
வாதித னாயத் திறங்கின நபியு
மன்புட னினிதுவந் தனரால்.
4
(இ-ள்) அன்றியும், குற்றத்தைப்
பொருந்திய கயினுக்காஹென்று சொல்லும் அவர்களினது கூட்டத்தின்
|