பக்கம் எண் :

சீறாப்புராணம்

1351


இரண்டாம் பாகம்
 

அபீறாபிகு வதைப்படலம்

 

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 

3689. மக்கமா நகரில் வாழுங் காபிரி லொருவன் மாறா

     விக்கின மென்ப யாவும் விளைத்திடுங் கொடிய நீரான்

     மைக்கலந் துயருஞ் சோலை கைபறில் வாழ்வோ னாளுந்

     துக்கமு மிழிவும் வீணும் விளைப்பது துணிந்து நின்றோன்.

1

     (இ-ள்) திருமக்கமாநகரத்தில் வாழுகின்ற காபிர்களி  லொருவனும், ஒழியாத தீமையென்று சொல்லப்படுவனவாகிய எல்லாவற்றையுஞ் செய்கின்ற கொடிய குணத்தை யுடையவனும், மேகத்திற் கலந்து ஓங்கா நிற்குஞ் சோலைகளையுடைய கைபறென்னும் நகரத்தில் வாழ்பவனும், பிரதிதினமும் துன்பத்தையும் கேட்டையும் வீணான செய்கைகளையுஞ் செய்வதில் முயன்று நின்றவனும்.

 

3690. கள்ளமுங் கொலையும் பொய்யும் நிந்தையுங் கள்ளு நீங்கா

     துள்ளகத் திருத்தி வாழு முயிர்த்துணை யாகக் கொண்டோன்

     வள்ளனந் நபிதந் நாமம் வழுத்திய மாந்தர்க் கெல்லா

     மெள்ளள விரக்க மில்லா திடும்புகள் விளைத்த சூமன்.

2

      (இ-ள்) களவையும், கொலையையும் பொய்யையும், நிந்தையையும், கள்ளையும் மாறாமல் மனதினுள் ளுறையும்படி செய்து வாழுகின்ற பிராணனுக்கு உதவியாகக் கொண்டவனும், வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது திருநாமத்தைக் கூறிய ஜனங்களனைவருக்கும் எட்பிரமாணமுந் தயவில்லாமல் துன்பங்களைச் செய்த சூமனும்.

 

3691. கதிபெறுந் தீனுள் ளோரைக் கண்ணினுங் காண மேவான்

     பதிதொறு மருவார்க் கேயப் பண்புறு முதவி யானோன்

     சதிமனத் திபுலீ சென்போன் றனையரி லொருவன் போல்வான்

     அதபறி வென்ப தில்லா வகத்தபீ றாபி கென்போன்.

3

      (இ-ள்) மோட்சத்தைப் பெறுகின்ற தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்திலுள்ள முஸ்லிங்களைக் கண்ணினாற் பார்க்கவும் பொருந்தாதவனும், நகரங்கள் தோறும் சத்துராதிகளான காபிர்களுக் கிசையும்படி தகுதி பொருந்திய ஒத்தாசையானவனும், வஞ்சகத்தைக் கொண்ட இதயத்தையுடைய இபுலீசு லகுனத்துல்லாவென்று சொல்பவனது புத்திரர்களில் ஒரு