| 
 இரண்டாம் பாகம் 
  
புத்திரனைப் போன்றவனுமான
மரியாதை புத்தியென்பது இல்லாத மனத்தைக் கொண்ட அபீறாபிகென்று சொல்லும் பெயரையுடையவன். 
  
3692. 
இனையன பண்பி னோன்றன் செய்கையு மியற்கை யாவு
     மனனுற வைக றோறும்
வரிசையங் குரிசில் கேட்டுப் 
     புனைகழ லுதைக்குத்
தந்த புதல்வரில் அப்துல் லாவைத் 
     தனியழைத் திருத்தித்
தோன்றா மறையினிற் சாற்று வாரால். 
4  
     (இ-ள்) இத்தன்மையான குணத்தை யுடையவனாகிய
அந்த அபீறாபிகு என்பவனது செயல்களையும், எல்லாச் சுபாவங்களையும் சங்கையையுடைய அழகிய
குரிசிலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா  றசூல்  சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்கள் பிரதிதினமும் இதயத்திற் றங்கும்படி கேள்வியுற்று அலங்காரஞ் செய்த வீரக்கழலைத்
தரித்த உதைக்கென்பவன் இவ்வுலகத்தின்கண் தந்த புத்திரர்களில் அப்துல்லா றலியல்லாகு அன்கு
அவர்களை ஏகமாய்க் கூப்பிட்டு இருக்கும்படி செய்து இடையி லுண்டாகாத வேதவசனத்தைப் போலுங் கூறுவார்கள். 
  
3693.  அழிவுறு நெறிமேற் கொண்ட காபிர்க ளறித றோன்றா
     வழியபீ் றாபி
தன்னைக் கைபறிற் புகுந்து வல்லே 
     யிழிவுமற் றிடரு
நீங்கக் கோறல்செய் திவணி னீவிர் 
     குழுவுடன் வருக வென்றா
ரன்னது கருத்துட் கொண்டார். 
5  
    
(இ-ள்) நீவிர் அழிந்து போகும் மார்க்கத்தில்
தலைப்பட்ட காபிர்களாகிய சத்துராதிகள் தெரிவதற்கு விளங்காத பாதையோடு கைபறென்னும் நகரத்தில்
விரைவிற் போய்ச் சேர்ந்து        
அபீறாபிகென்பவனை
அவனது கேடுந்தொலைந்து துன்பமும் நீங்கும் வண்ணம் கொலை செய்து உமது கூட்டத்தோடும் இங்கு
வருவீராகவென்று சொன்னார்கள். அவ்வாசகத்தை அவர் தமது மனத்தினுட் கொண்டார். 
  
3694. 
ஆரண நெறிம றாவன் சாரிகள் பதின்மர் சூழ
     வாரணி முலையார்
சிந்தை மயக்குறும் வனப்பு வாய்ந்த 
     தாரணி புயங்கள்
விம்ம அப்துல்லா தயங்குங் காந்திக் 
     கூரயில் கரத்திற்
றாங்கிக் குரகத மேற்கொண் டாரால். 
6  
     (இ-ள்) அவ்வாறு கொண்ட அப்துல்லா றலியல்லாகு
அன்கு  அவர்கள் புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது சன்மார்க்கத்தில் நின்றும் நீங்காத அன்சாரீன்கள்
பத்துப் பேர்கள் தங்களைச் சூழும் வண்ணம் இரவிக்கையைத் தரித்த அழகிய முலையையுடைய மாதர்கள்
தங்களது மனமானது மயக்கத்தைப் பொருந்தும் 
 |