பக்கம் எண் :

சீறாப்புராணம்

1372


இரண்டாம் பாகம்
 

அபூத்தல்ஹா விருந்துப் படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

 

3749. மருவலர்க ளுயிரருந்தி யூனுணங்குங்

          கதிரிலைவேன் மன்னர் சூழத்

     திருமறைநந் நபியிருக்கும் பள்ளியிடத்

          தெய்திமுகச் செவ்வி நோக்கி

     யொருவருக்குந் தோன்றாது பசியுடனிங்

          கிருந்தனரென் றுன்னி நீங்கா

     விரைவினபூத் தல்காசென் றில்லவளை

          விளித்தொரு சொல்விளம்பு வாரால்.

1

      (இ-ள்) அபூத்தல்ஹா றலில்லாகு அன்கு அவர்கள் தெய்வீகந் தங்கிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் குறைஷியா காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சத்துராதிகளாகிய காபிர்களது பிராணனைச் சாப்பிட்டு நிணமானது காயப் பெற்ற பிரகாசத்தையும் மாமிசத்தை யள்ளிக் கொள்ளும் இலைகளையுங்கொண்ட வேலாயுதத்தையுடைய அரசர்களான அசுஹாபிமார்கள் சூழும்படி யிருக்கின்ற பள்ளியின்கண் சென்று அந்நபிகட்பெருமா னவர்களது வதனத்தின் அழகைப் பார்த்து ஒருவருக்குந் தெரியாமல் பசியோடும் இவ்விடத்திலுறைந்தார்களென்று கருதி மாறாதவேகத்தில் தங்கள் வீட்டிற் சென்று மனைவியைக் கூப்பிட்டு ஒருவார்த்தை சொல்லுவார்கள்.
 

3750. பதலைமுச லிகையுரைப்ப வுரைத்தநபி

          பசிதீரப் பண்பி னோடு

     முதவுதற்கே தெனினுமனை யிடத்துளவோ

          வெனவுரைப்ப வுள்ளங் கூர்ந்து

     மதுரமொழு கியகோதும் புறட்டிமூன்

          றுளவெனமான் வழங்க வாங்கி

     யதபுடனந் நபியிடத்தி னல்குமென

          அனசுகையி லளித்திட் டாரால்.

2

(இ-ள்) மலையினிடத்துள்ள உடும்பானது பேச, எதிர்பேசிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல்