பக்கம் எண் :

சீறாப்புராணம்

1379


இரண்டாம் பாகம்
 

போர் பொருதி மடிந்த நமது குலத்தினர்களது பழிக்குப் பதில் பழி வாங்காதிருப்பதுவே ஓர் குற்றம். அதைப் பார்க்கிலும் பெரிய குற்றம் நாம் அவர்களோடு போர் புரியச் சென்று நமது பண்டங்க ளெல்லாவற்றையு மிழந்தது, இதுவும் அதுவுமல்லாமல் இன்னங் குற்றம், நாம் அவர்களோடு எதிராகப் போர் புரியா திருப்பது.

 

3763. உதிக்கு மேலவ ரொருவர்க்குத் தீங்குறி னுறைந்த

     பதிக்கு மப்பெருங் குலத்துக்குந் தீங்கெனப் படுமான்

     மதிக்கும் வெற்றியுண் டெனிலவை முதல்வரன் முறையாத்

     துதிக்கு மெவ்வுல கிடத்தினுஞ் சுடர்வடி வேலீர்.

4  

     (இ-ள்) அன்றியும், பிரகாசந் தங்கிய கூரிய வேலாயுதத்தையுடைய இராஜர்களே! இவ்வுலகத்தின்கண் தோற்றிய பெரியவ ரொருவருக்கு ஒரு தீமையானது வந்து சேர்ந்தால் அந்தப் பெரியவர் தங்கிய ஊருக்கும் அந்த ஊரிலுள்ள பெரிய கூட்டத்திற்குந் தீமையென்று சொல்லப்படும். யாவரும் மதிக்கின்ற வெற்றியுண்டு மென்றால் அந்த வெற்றிகள் கிடைத்தது முதல் மேற்சொல்லியபடி எல்லா வுலகத்தின்கண்ணும் ஒழுங்காகப் புகழப்படும்.  

 

3764.  இறந்த மன்னவர் துணைவரும் புதல்வரென் பவரு

     நிறைந்தி ருந்தனர் நிதியமுங் கணிப்பில நிறைந்த

     திறந்த ருந்துணி வுளவெனிற் பகையெனுந் தீனோர்

     புறந்த ரும்படி முடிப்பது மரிதல புகழீர்.

5  

      (இ-ள்) அன்றியும், கீர்த்தியையுடைய மன்னர்களே! இங்கு முன்னர் பதுறுயுத்தத்தில் மாண்ட அரசர்களது சகோதரர்களும் புத்திரர்களென்று சொல்லப்பட்டவர்களும் நிறைந்திருக்கின்றார்கள். கணக்கில்லாத திரவியங்களும் நிறைந்திருக்கின்றன. வலிமையைத் தருகின்ற நம்பிக்கை யுண்டுமென்றால் நமது பகையென்று சொல்லும் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தையுடையவர்கள் தோற்கும் வண்ணம் நிறைவேற்றுவதும் அருமையான காரியமல்ல.

 

3765. இந்த வல்வித மனைத்துநம் மிடத்தினி லிருந்தும்

     புந்தி யற்றிவ ணிருந்தன முணர்விலோம் புவியின்

     மந்தி ரத்தொழி லொன்றலான் முகம்மதென் பவனுக்

     கெந்த வெல்வித மிருந்தது கதிரிலை வேலீர்.

6

     (இ-ள்) மாமிசத்தை யள்ளிக் கொள்ளா நிற்கும் பிரகாசத்தைக் கொண்ட இலைகள் பொருந்திய வேலாயுதத்தையுடைய அதிபதிகளே! நம்மிடத்தில் இந்த வலிமையான தன்மைகளியாவுமிருந்தும் அறிவில்லாதவர்களான நாம்