பக்கம் எண் :

சீறாப்புராணம்

143


முதற்பாகம்
 

பொருந்திய சம்பத்து யாதொன்று மில்லையாம் இங்குள்ள குழந்தைக்குத் தகப்பனும் இல்லையாம் இறந்து போனாராம் - தரித்திரத்தையுடைய குடிதானாம். ஆதலால் இக் குழந்தையைக் கொண்டும் நாம் எவ்வாறு பிழைப்பது என்று சொன்னார்கள்.

 

     330. பலன்ப டைப்பதும் வறுமையைப் படைப்பதும் பாரி

        னலம்ப டைப்பது முடையவன் விதிப்படி நடுக்குற்

        றுலைந்து நின்மன முடைவதென் வெண்டிரை யுடுத்த

        தலம்பு ரப்பதின் னாரெனச் சாற்றவு மரிதே.

40

     (இ-ள்) அதைக் கேட்ட ஆரிதென்பவர் அலிமாவை நோக்கி இப் பூலோகத்தின்கண் ஒவ்வொருவரும் பிரயோசனத்தை அடைவதும், தரித்திரத்தை யடைவதும், நன்மையை யடைவதும், அகில சராசரங்களையும் சொந்தமா யுடையவனான கடவுள் ஆதி காலத்தில் கற்பித்த வூழ்விதிப்படியே யாகும். ஆதலால் நீ நடுக்கமுற்று உலைந்து உனது மனமானது தளர்ச்சி கொள்வதேன்! வெள்ளிய அலைகளையுடைய சமுத்திரத்தை ஆடையாகச் சூழப்பெற்ற இந்த நிலத்தை அரசாட்சி செய்வது இன்னார் செய்தார் இன்னாரென்று நிச்சயமாக சொல்லவு மரிதாகும்.

 

     331. படியி னிற்பெறும் பலனமக் குளவெனிற் பாதிக்

        கொடிம ருங்குலிக் குழந்தையா லாங்கொடி யவரேல்

        வடிவு றும்பொரு ளடுக்கினு நம்வயின் வாராக்

        கடிதி னிற்புகுந் தறிவமென் றாரிது கரைந்தான்.

41

     (இ-ள்) அன்றியும், பாதிக் கொடிபோலும் இடையினையுடைய அலிமாவே! நமக்கு இப்பூமியின்கண் பெறக்கூடிய பிரயோசனமுண்டுமென்றால், அந்தப் பிரயோசனமானது இந்தப் பிள்ளையினாலேயே கிடைத்தலாகும். அல்லாது நாம் கொடியவர்களாக இருப்போமேயானால் அழகு பொருந்தா நிற்கும் சம்பத்தானது நம்மிடத்தில் வந்து சமீபாக நெருங்கினாலும் அச்சம்பத்து நம்மில் வந்து சாராது. ஆகையால் நாம் சீக்கிரத்தில் இவ்வீட்டிலேயே போய்ப் பார்த்தறிகுவோமென்று சொன்னார்கள்.

 

     332. இருவ ருமெழுந் தாமினா மனையிடத் தெய்தித்

        தெரிவை நின்மகக் கொணர்கெனக் கேட்டலுஞ் சிறந்த 

        பரிம ளந்திகழ் மதலையைக் கொணர்ந்தனர் பார்த்தார்

        வரிப ரந்தசெவ் விழிதிறந் தனர்முகம் மதுவே.

42

     (இ-ள்) ஆரிதும் அலிமாவும், அந்தப் பிரகாரமே யெழுந்து ஆமினா அவர்களினது வீட்டின்கண் சேர்ந்து, தெய்வப் பெண்ணாகிய ஆமினாவே! உனது குழந்தையை எங்கள்பால் கொண்டு வருவாயாக வென்று கேட்டளவில் அவர்கள் உடனே