பக்கம் எண் :

சீறாப்புராணம்

142


முதற்பாகம்
 

இவ்விருவரையும் மானினது பார்வை போன்ற பார்வை பொருந்தும் விழிகளையுடைய ஆமினாவென்று சொல்லும் வாசனை பொருந்திய அழகிய கூந்தலையுடையாளது பெருமைதங்கிய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போவாயாகவென்று சொல்லியனுப்பினார்கள்.

 

கலிநிலைத்துறை

 

     327. அரிவை யாமினா வகத்தினி லடைந்தலி மாவுன்

        னுரிய மைந்தனுக் கென்முலைப் பாலமு தூட்டத்

        தெரிய வந்தன னருளுக வென்றலுஞ் சிறந்த

        மரும லர்க்குழ லிவர்க்கெதிர் மொழிவழங் குவரால்.

37

     (இ-ள்) அங்ஙனம் வந்த ஹலிமா தெய்வப் பெண் போல்வாளாகிய ஆமினா அவர்களின் வீட்டிற் சேர்ந்து ஆமினாவைப் பார்த்து உனது சொந்தமான புதல்வனுக்கு எனது முலையின் பாலாகிய அமுதத்தையூட்டுதற்காய் அக்குழந்தையைப் பார்க்கும்படி வந்தேன். ஆதலால் அக்குழந்தையை என்னிடம் தருவாயாக வென்று கேட்ட மாத்திரத்தில் இவர்களுக்குச் சிறப்பான வாசனை பொருந்திய புஷ்பங்கள் தங்கும் கூந்தலையுடைய ஆமினா அவர்கள் பதில் வார்த்தை சொல்லுவார்கள்.

 

           328. உற்ற தந்தையு மிலையுறு பொருளிலை யெத்தீம்

        பெற்ற பிள்ளையோ ருதவிசெய் குவர்பிற ரிலைநீர்

        பற்று நற்பொருட் குறித்துவந் தவர்பசி யுடையீ

        ரிற்றைக் குண்பதற் கிடமிலை யென்னிடத் தென்றார்.

38

     (இ-ள்) ஏழையாகிய நான் பெற்ற குழந்தைக்குச் சரியான தகப்பனுமில்லை பொருந்திய யாதொரு சம்பத்துமில்லை வேறே ஓருதவியாவது செய்யப்பட்டவர்கள் யாருமில்லை நீங்கள் தங்களூரைவிட்டும் விரும்புகின்ற நல்லபொருள் சம்பாதிக்க வேண்டுமென்று நியமித்து அதன் மேல் ஆசைகொண்டு வந்திருக்கின்றீர்கள். மேலும் பசியுடையவர்களாகவு மிருக்கிறீர்கள் என்னிடத்தில் இன்றைக்கு ஒரு வேளைக்குக்கூட உண்பதற்கு இடமில்லையென்று சொன்னார்கள்.

 

     329. அந்த வாறலி மாதுணை யாரிதை நோக்கி

        யிந்த நன்மனைக் குறுபொரு ளேதுமொன் றிலையாந்

        தந்தை யுமிலை யாம்வறு மைக்குடி தானா

        மெந்த வாறியா முய்வதிக் குழந்தையா லென்றாள்.

39

     (இ-ள்) அச்சொற்களைக் கேட்ட அலிமா தமது நாயகரான ஆரிதென்பவரைப் பார்த்து நன்மைதங்கிய இந்த வீட்டிற்கு