பக்கம் எண் :

சீறாப்புராணம்

141


முதற்பாகம்
 

      (இ-ள்) ஹலிமா அவர்கள் அவ்வாறு தங்களது குடும்பத்துடன் தங்கள் நாமத்தையும் சொல்ல, மாறுதலில்லாத மலைபோலுந் தோள்களை யுடையவரான கொற்றவரென்னும் அப்துல் முத்தலிபவர்கள் கேட்டு மேன்மையோடு இப்பெண்ணின் குடும்பத்தினது செல்வமும் கனதியும் நன்றாயிருக்கின்றதென்றும் நமக்கவசியமாயுள்ள பொருளானது பெலமுற்றதென்றும் தங்களது மனதின்கண் நினைத்துப் பல சங்கதிகளையு முணர்ந்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

     324. பெறுமொரு தந்தையு மில்லைப் பின்னிய

        வறுமையெத் தீம்தரு மதலை யுண்டுகொ

        லறிவுற முலைகொடுத் தாக்கஞ் செய்வதற்

        குறுவதோ நும்மன மென்ன வோதினார்.

34

     (இ-ள்) எங்களிடத்தில் பின்னிய தாரித்திரியத்தை யுடைய ஏழையான ஆமினாவென்னும் ஒரு பெண்ணானவளீன்ற பிள்ளையொன்றுண்டு, ஒப்பில்லாத அப்பிள்ளையைப் பெற்ற தகப்பனுமில்லை இறந்து போனார். ஆனதினால் அறிவு பொருந்தும்படி நீங்கள் அந்தப் பிள்ளைக்கு முலைப்பால் கொடுத்து அதை பராமரிப்பதற்கு உங்களுடைய மனமானது பொருந்துகின்றதா! இல்லையா! சொல்லுங்களென்று கேட்டார்கள்.

 

     325. மன்றலங் குழலியு மன்ன னாரிது

        மொன்றிய மனத்தொடு சாவிச் செல்குவ

        நன்றுபார்த் தறிகுவ நாமென் றுன்னியே

        வென்றிவேற் செழுங்கர வேந்துக் கோதினார்.

35

     (இ-ள்) அச்சமாச்சாரத்தைக் கேட்ட வாசனை தங்கிய கூந்தலையுடைய ஹலிமாவும் மன்னவரான ஆரிதும் ஒன்றுபட்ட மனதோடும் ஒருவருக்கொருவர் தங்களது நிலைமை முதலியவைகளைப்பற்றி ஆலோசித்து நல்லது நாம் போகுவோம். அந்தக் குழந்தையைப் பார்த்தறிகுவோமென்று நினைத்து, வெற்றி தங்கிய வேலாயுதம் பொருந்திய செழுமையான கையையுடைய அப்துல் முத்தலிபுக்குச் சொன்னார்கள்.

 

     326. அவ்வயி னப்துல்முத் தலிபு மாங்கொரு

        செவ்விய வறிவனைக் கூட்டிச் செல்கென

        நவ்விநோக் குறும்விழி யாமி னாவெனு

        மல்வலங் குழலிமா மனைக்க னுப்பினார்.

36

     (இ-ள்) அவ்விதம் அவர்கள் சொல்லவே, அப்துல் முத்தலிபென்பவர்களும் அவ்விடத்தில் நின்ற செம்மையான அறிவினையுடைய ஒரு சிறுவனைப் பார்த்து அவனோடும்