| 
 இரண்டாம் பாகம் 
  
கோட்டையி னகத்திருந்த பண்டங்களை
மனதின்கண் களிப்படைந்து எட்பிரமாணமு மில்லாமல் வறியவர்களுக்குக் கொடுத்து விட்டு வீரத்தைக்
கொண்ட அரசர்களான சேனைகள் பக்கத்தில் வளைந்து வரும் வண்ணம் கபடமறத் திருமதீனமா நகரத்தில்
வந்து சேர்ந்தார்கள். 
  
4139.  
பிறங்குபத ணத்தெயில்பி டித்தவ ணடைந்த 
     மறங்கெழுமன் சாரிக ளுவப்புற மகிழ்ந்தே 
     யறங்குலவு கத்தனருள் பெற்றசில வாயத் 
     திறங்கின தவத்துறை முகம்மதி னிடத்தே. 
17 
     (இ-ள்) அவ்வாறு வந்து
சேர, தவத்தின் கண் தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்துப் பிரகாசியா நிற்கு
மதிலைக் கொண்ட கோட்டையைக் கைப்பற்றி அந்தச் சுகுறாவென்னு மூரின்கண் பெற்ற வெற்றியானது
ஓங்கா நிற்கும் அன்சாரீன்கள் சந்தோஷித்து மகிழ்ச்சியுறும் வண்ணம் புண்ணிய மானது பிரகாசிக்கின்ற
கத்தனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் காருண்ணித்தைப் பெற்ற சில ஆயத்தாகிய வேதவசனங்களிறங்கின. 
 |