பக்கம் எண் :

சீறாப்புராணம்

1579


இரண்டாம் பாகம்
 

பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வேல், வாளாகிய ஆயுதங்களைப் பூண்ட கைகளையுடையவர்களான அந்த அசுஹாபிமார்களது தாமரை மலரை நிகர்த்த ஒள்ளிய வதனங்களைப் பார்த்துத் தயமுஞ் செய்து தொழக் கண்டது இப்பூமியின் கண்ணுள்ள பெண்களுக் கெல்லாந் திலகத்தை நிகர்த்த மயில் போலுஞ் சாயலையுடைய ஆயிஷாறலி யல்லாகு அன்ஹா அவர்களது பறக்கத்தென்று சொன்னார்கள்.

 

4336. ஆகத்துவ கையெய்திட விருக்குமள வையினின்

     மாகத்துடு வொத்தேமிளிர்ந் திமைக்குமணி வடமுஞ்

     சோகத்தக டுள்ளேகிடந் தெடுத்தார்துயர் விடுத்தார்

     வேகத்தொடு வெய்யோ னெழப் படையும்விரைந் தெழுந்த.

42

     (இ-ள்) அவ்வாறு சொல்லி மனதின்கண் மகிழ்ச்சி யுறும்படி அங்கிருக்கின்ற அந்தச் சமயத்தில், ஆகாயத்தினிடத்துத் தோற்றா நிற்கும் நட்சத்திரங்களை நிகர்த்துப் பிரகாசித் தொளிருகின்ற அந்த முத்து மாலையையும் ஓரொட்டகத்தினது வயிற்றினடியிற் கிடந்து எடுத்துத் தங்களது வருத்தத்தை யகற்றினார்கள். அதன் பின் சூரியனும் வேகத்தோடு ஆகாயத்தின் கண் ணெழும்ப, அங்கிருந்த சைனியங்களும், வேகமுற் றெழும்பின.

 

4337. செற்றேகுரு திச்சாறுகு டித்தேமெய் சிவக்கு

     மெற்றாவுக திர்க்கோணமெ டுத்தேமறை கற்றோர்

     விற்றானையோ டுற்றார்புர வித்தானைந டப்ப

     வற்றாதருண் மிக்கார்நபி புக்கார்மதி னத்தில்.

43

     (இ-ள்) அவ்வாறு எழும்பி, புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தை யோதினவர்களான அசுஹாபிமார்கள் சத்துராதிகளைக் கொன்று அவர்களது இரத்தமாகிய சாற்றை யருந்தித் தமதுடலானது சிவக்கப் பெற்ற பிரகாசத்தைப் பரப்புகின்ற ஒளியையுடைய வாளாயுதங்களைக் கையிலெடுத்துக் கொண்டு குதிரைப் படைகள் நடக்கும் வண்ணம் விற்படைகளோடு சேர்ந்து நடந்தார்கள். அவ்விதம் நடக்க, குறையாது மிகவும் பெருகிய காருண்ணியத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுந் திருமதீனமா நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

4338. மதினாவெனு நகரெய்திய வள்ளலடை யலர்தம்

     பதிமேவிய சிறையாடைபன் மணிபாய்பரி சோக

     நிதியாவுமங் குறுதீனர்க ணெஞ்சம்மகிழ் மீற

     விதமோடவ ரவர்க்கேயவை பகுந்தேயினி தீந்தார்.

44