|
இரண்டாம் பாகம்
(இ-ள்) திருமதீனமென்று
சொல்லும் பதியின்கண் அவ்வாறு போய்ச் சேர்ந்த வள்ளலாகிய நமது நாயகம் செய்யிதுல் முறுசலீன்
ஹபீபுறப்பில் ஆலமீன் ஹாமிது அஹ்மது முகம்மது றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சத்துராதிகளான
அந்த முஸ்தலிக்குக் காபிர்களது முறைசீக்கென்னும் நகரத்திலுண்டான சிறைகள், வத்திரங்கள், பல
இரத்தினங்கள், தாவா நிற்குங் குதிரைகள், ஒட்டகங்கள், திரவியங்களாகிய அனைத்தையும் அங்கே
தங்கிய தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்களது மனதின் கண் சந்தோஷமானது
அதிகரிக்கும் வண்ணம் அவரவர்களுக்கே அவைகளை விதமுடன் பங்கிட்டு இனிமையோடுங் கொடுத்தார்கள்.
4339.
தருமந்திகழ் தாபித்தென வருமன்னவர் சார்பின்
வருமந்திகழ் தருஆரிது வரத்தாலவ தரித்த
திருவுங்குண நலனும்பெறு செயலும்பொறை நிறையு
முருவந்தமு முறவந்தனள் சுவைறாவென வொருமான்.
45
(இ-ள்) அவ்வாறு
கொடுக்க, புண்ணியமானது பிரகாசியா நிற்குந் தாபித்து றலியல்லாகு அன்கு வென்று இவ்வுலகத்தின்
கண் வந்த அரசரது சார்பில் வன்மமானது திகழப் பெற்ற ஆரிதென்பவனது வரத்தினாற் பிறந்த தெய்வீகமும்
குணத்தினது நலமும் அதற்கேற்கப் பெற்ற செய்கையும் பொறுமையுங் கற்பும் சரீரத்தினது அழகும்
பொருந்தும் வண்ணம் சுவைறா வென்று சொல்லும்படி ஒப்பற்ற மான்போலும் மருண்ட பார்வையையுடைய ஒரு
கன்னியானவள் வந்தாள்.
4340.
அறமேவின ரம்மாதினை யருட்பார்வையி னோக்கித்
தறையாள்வது மிவளேவனி தையரியாவர்கள் கற்புக்
கிறையாவது மிவளேசொலு மெழிலாவது மிவளே
சிறையாளவு மொண்ணாதென மனத்திற்றெரு மாந்தார்.
46
(இ-ள்) அவ்வாறு வர,
புண்ணியமானது பொருந்தப் பெற்றவர்களான அந்தத் தாபித்து றலியல்லாகு அன்கு அவர்கள் அந்தப் பெண்ணைத்
தங்களது காருண்ணியத்தைக் கொண்ட கண்களாற் பார்த்து இப்பூலோகத்தை யாள்பவளும் இவள் தான்.
பெண்களாகிய அனைவர்களது கற்புக்கு அரசாவது மிவள் தான். புகழா நிற்கும் அழகாவது மிவள் தான்.
ஆதலால் நாம் இவளை யடிமையாக ஆட்சி செய்த லடாதென்று மனதின்கண் கலக்க முற்றார்கள்.
|