|
இரண்டாம் பாகம்
4341.
பொருளேயென திடமேவரு பொறையோடு மளித்து
மருவேமரு மணமேவளர் மதியேமதி மாதர்
குருவேதிரு மணியேகுல மயிலேபெறு தாயே
வுருவேவடி வொளிவேயும துடன்மீளுதி யென்றார்.
47
(இ-ள்) அவ்வாறு கலக்கமுற்றுத்
தேனானவளே! அத்தேனினது வாசனையானவளே! ஓங்கா நிற்குஞ் சந்திரனானவளே! அறிவையுடைய பெண்களுக்குக்
குருவானவளே! தெய்வீகந் தங்கிய இரத்தினமானவளே! மேன்மை பொருந்திய மயிலானவளே! னுங்களைப் பெற்ற
தாயானவளே! அழகானவளே! அழகிய ஒளியானவளே! நீ என்னிடத்தில் பெறுதற்கரிய பொறுமையோடுந் திரவியத்தைக்
கொடுத்து உனதுடலை மீட்டுக் கொள்ளென்று சொன்னார்கள்.
4342.
கேட்டாள் சிறை மீட்டேகுதி ரென்னுங்கிள வியினைத்
தாட்டாமரை மயிலன்னவ ணலனீதெனத் தனியே
பேட்டோதிம முறழத்தரை நடந்தேபிறழ் கின்ற
தீட்டாவுரு வெய்துந்நபி திருமுன்னரின் வந்தாள்.
48
(இ-ள்) பாதமாகிய தாமரை
மலரையுடைய மயில்போலுஞ் சாயலைக் கொண்ட அந்த மாதானவள் அவர்கள் அவ்வாறு உனது சிறையை மீட்டிச்
செல்லுவாயாக வென்று சொன்ன வார்த்தைகளைக் கேள்வியுற்று இது நன்மை பொருந்திய சமாச்சாரமென்று
கருதிப் பெடையன்னத்தை நிகர்ப்பத் தனியாய்ப் பூமியின்கண் நடந்து எழுதுவதற்கருமையான ஒளிர்கின்ற
வடிவத்தைப் பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தின் கண் வந்தாள்.
4343.
வந்தாள்பணிந் தெழுந்தாளவ ணின்றேயொரு மருங்கிற்
கொந்தார்தரு வெனுநந்நபி குளிர்வாண்முக நோக்கி
யந்தாரணி யரசேயட லரியேயதி சயமே
சந்தாடவி வரையேயெனப் புகழ்ந்தேயுரை சாற்றும்.
49
(இ-ள்) அவ்வாறுவந்து
வணங்கி யெழும்பி அவ்விடத்திலொருபக்கத்தில் நின்று கொண்டு பூங்கொத்துக்கள் நிறைந்த கற்பகத்தருவென்று
சொல்லும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில்
ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது குளிர்ச்சி தங்கிய ஒள்ளிய வதனத்தைப் பார்த்து
அழகிய இப்பூலோகத்திற்கு மன்னரானவர்களே! வலிமையைக் கொண்ட சிங்கமானவர்களே! அற்புதமானவர்களே!
சந்தனச் சோலைகளையுடைய
|