பக்கம் எண் :

சீறாப்புராணம்

1600


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்வாறு கூடி இப்பூமியின் கண் பொருந்தா நிற்குந் தருமத்தைக் கெடுக்கும்படி வந்த பாவத்தையொத்த குணத்தையுடையவனான அந்தக் குயையென்பவன் கணக்கற்ற சேனாசமுத்திரமானது எவ்விடத்தும் பரவி நடக்கும் வண்ணம் இப்பூமி முழுவதும் புகழா நிற்கும் பெருமையை யுடைய திருமக்கமா நகரத்தின் கண் வந்து சேர்ந்து தனது மனமு முடலும் மகிழ்ச்சி யடையும் வண்ணம் ஓர் பக்கத்திலிருந்தான்.

 

4396. ஈங்கிவ னினைய தன்மை யியற்றிய தெல்லா மானந்

     தாங்கிய தரும மேக மொத்தெனத் தகைமை சான்ற

     வோங்கலிற் சிறந்த திண்டோண் முகம்மதாண் டுணரக் கேட்டு

     நீங்கிலா துயிரி னேய்ந்த துணைவர்மு னிகழ்த்தி னாரால்.

41

     (இ-ள்) இவ்விடத்தில் இவன் இந்தப் பிரகாரமான இவ்விஷயங்களை செய்த அனைத்தையும் பெருந்தன்மையைப் பொறுத்த புண்ணியத்தைக் கொண்ட மேகத்தை யொத்தாற்போன்ற குணமானது அதிகரிக்கப் பெற்ற மலையைப் பார்க்கினும் மேன்மைப்பட்ட திண்ணிய தோள்களை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்தத் திருமதீனமா நகரத்தின் கண் தெரியும்படி கேள்வியுற்றுத் தங்களை விட்டும் விலகாமல் தங்களது பிராணனைப் போலும் பொருந்திய நேசர்களான அசுஹாபிமார்களது முன்னர்க் கூறினார்கள்.

 

4397. பெருமையி னின்ற சோதிப் பெரியவ னேவ னாளு

     மருவிய தீனோ ரியாருங் கேட்டலும் வண்மைத் தக்க

     தருவென வுதவுஞ் சல்மான் பாரிசி தபனன் மானத்

     திருவொளி நிறைந்த சிங்கச் செழுமுக நோக்கிச் சொல்வார்.

42

     (இ-ள்) அவ்வாறு கூற, அதைப் பிரகாசத்தையுடைய யாவருக்கும் மேலானவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் ஏவலிற் பிரதி தினமும் பொருந்திய பெருமையோடும் நின்ற தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடையவர்களான அந்த அசுஹாபிமார்களனைவருங் கேட்டவளவிற் செல்வத்தினால் தகுதி பொருந்தப்பட்ட கற்பகத் தருவைப்போலுங் கொடுக்கா நிற்குஞ் சல்மான் பாரிசு றலியல்லாகு அன்கு அவர்கள் வீட்டின் கண்ணுதித்த சூரியனைப் போலும் அழகிய பிரகாசமானது நிறையப் பெற்ற சிங்கத்தை யொத்த அந்நபிகட் பெருமானவர்களது செழியவதனத்தைப் பார்த்துச் சொல்லுவார்கள்.