இரண்டாம் பாகம்
முஜ்தபா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களோடும் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய
அசுஹாபிமார்களோடும் பிரதி தினமும் ஒழுங்குடன் போக்கு வரவுகளோடும் நாங்கள் வாழ்ந்து
வருவோம். அதனால் எங்களுக்கு யாதொரு விரோதமு மில்லையென்று மாறாத உண்மை வார்த்தைகளைச்
சொல்லி வலக்கையு மடித்துப் பின்னருந் தீமையுட னிருந்தார்கள்.
4393.
உறைந்தவர் தம்மை யெய்தி யுற்றவை யனைத்துங் கூறித்
திறந்தர மகிழ்வு வவரையும் போரிற் சேர்த்தி
யறந்திக ழாத நெஞ்சர் மற்றுள வரச ரியாரு
நிறங்களிப் புறத்தன் வாய்மை யுரையினி னிறுத்தி னானால்.
38
(இ-ள்) அவ்வா றிருந்தவர்களான
அந்தப் பனீக்குறைலாக் கூட்டத்தார்களை யடைந்து நிகழ்ந்த சமாச்சாரங்களெல்லாவற்றையுஞ்
சொல்லி வலிமையான துண்டாகவும், மகிழ்ச்சியான ததிகரிக்கவும், அவர்களையும் தான் செய்யப்
போகும் யுத்தத்திற் சேரச் செய்து புண்ணியமானது விளங்கப் பெறாத இதயத்தை யுடையவர்களான மற்றுள்ள
வேந்தர்களனைவர்களையுந் தங்கள் சரீரமானது மகிழ்ச்சி யுறும்வண்ணம் தனது வாயிலிருந் துண்டான
வார்த்தைகளிலேயே கட்டுப்பட்டு நிற்கும்படி செய்தான்.
4394.
வசையிலாக் கத்பா னென்னு மாயமு மதிப்பில் லாத
அசத்தெனுங் குழுவு மிக்க அவுசெனுங் கணமு மூரித்
திசைபுகழ் தருங்க னானாச் சங்கமுந் திரட்டி யென்று
மிசையறு மெகூதிக் காபிர் தம்மொடு மீண்டி னானால்.
39
(இ-ள்) அவ்வாறு செய்து
களங்கமில்லாத கத்துபா னென்று சொல்லுங் கூட்டத்தையுங் கணிப்பிலடங்காத அசதென்று சொல்லுங்
கூட்டத்தையும் மேலான அவுசென்று சொல்லுங் கூட்டத்தையும் பெருமை பொருந்திய எண்டிசைகளும் புகழாநிற்குங்
கனானாக் கூட்டத்தையும் ஒன்றாகச் சேர்த்து எக்காலமுங் கீர்த்தியானது ஒழியப் பெற்ற எகூதிக்
காபிர்களோடும் வந்து கூடினான்.
4395. எண்ணிலாச் சேனை வெள்ள மெங்கணும் பரந்து செல்ல
மண்ணெலாம் புகழு மக்க மாநக ரதனி னெய்தி
யுண்ணிறங் களிப்ப வோர்பா லிருந்தன னுலகின் மேவும்
புண்ணிய மவிக்க வந்த பாவத்தைப் பொருவு நீரான்.
40
|