பக்கம் எண் :

சீறாப்புராணம்

1598


இரண்டாம் பாகம்
 

காபிர்க ளனைவரையும் யுத்தஞ் செய்வதில் மனதுடையவர்களாகச் செய்து திரும்பி யெழும்பி விரைவாக அயிலானென்று சொல்லும் ஊரின்கண் சென்றான்.

 

4390. ஆண்டினி தமர்ந்த கைசுக் குழுவின ரவரை யெய்தி

     வேண்டிய படையின் மக்க மேயது மறபி வேந்தர்

     கூண்டுபோர் முடிப்போ மென்னக் குறித்ததும் விரித்துச் சொன்னான்

     காண்டகாத் திறத்தன் னோரு மன்னதே கருத்தென் றாரால்.

35

     (இ-ள்) அவ்வாறு சென்று அவ்வூரில் இனிமையோடுந் தங்கியிருந்த கைசுக் கூட்டத்தார்களாகிய அவர்களைச் சார்ந்து வேண்டிய சைனியங்களையுடைய திருமக்கமா நகரத்திற்குத் தான் சென்றதையும், அறபிக்காபிர்களாகிய அரசர்கள் ஒன்று சேர்ந்து யுத்தத்தை நிறைவேற்றுவோ மென்று குறித்த சமாச்சாரத்தையும் விவரப்படுத்திச் சொன்னான். அடைதற்கியலாத வல்லமையை யுடைய அவர்களும் அதுவே கருத்தென்று சொன்னார்கள்.

 

4391. பொருந்தின ரிவர்கொ லென்ன அகுத்தபு புதல்வ னெஞ்சந்

     திருந்திட வவிட நீந்திச் சேவகர் மருங்கிற் சூழ

     வருந்திட நரகத் தெய்தும் பனீக்குறை லாவென் றோது

     மருந்தவ மழித்த மாந்த ருறைநக ரதனிற் சென்றான்.

36

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல, அகுத்தபென்பவனது புத்திரனான அந்தக் குயையென்பவன் இவர்களும் நமது கருத்திற் கிசைந்தார்க ளென்று மனமானது திருத்த முறும் வண்ணம் அந்த அயிலானென்னும் மூரைவிட்டுந் தாண்டி வீரர்கள் இருபக்கத்திலுந்தன்னை வளைந்து வரும்படி வருத்தமுறத் தனது நகரத்திற் பொருந்திய பனீக்குறைலா வென்று சொல்லும் அருமையான தவத்தை யில்லாமற் செய்த மாந்தர்கள் தங்கி யிருக்கும் பதியின்கண் போய்ச் சேர்ந்தான்.

 

4392. ஆங்கவ ரிறையோன் றூத ரவரொடுந் தீன ரோடும்

     பாங்கொடு நட்பி னாளும் வைகுவம் பகையின் றென்ன

     நீங்கிலா வாய்மை பேசி வலக்கையு நீட்டிப் பின்னுந்

     தீங்கொடு மிருந்தா ரெய்தும் விதியினைத் தெரிகி லாதார்.

37

     (இ-ள்) அவ்வாறு சேர்ந்து, அங்கே தங்களுக்கு வந்து சேரும் ஊழை இன்னதென்றுணராதவர்களான அந்தப் பனீக்குறைலாக் கூட்டத்தார்கள் யாவற்றிற்கு மிறைவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா செய்யிதுல் குறைஷிய்யா அஹ்மது