பக்கம் எண் :

சீறாப்புராணம்

1597


இரண்டாம் பாகம்
 

கருமையானது பிரகாசியா நிற்கு மருமையான இருகண்களும் புருவங்களை வளைத்துச் சிவந்தன.

 

4387. உயிர்த்தன னெடுமூச் சுள்ளம் வெதுப்பின னொளிரு மேனி

     வியர்த்தனன் கரிய மீசை துடித்தனன் விழியி னங்கி

     பெயர்த்தன னிதழை வாயான் மென்றனன் பிழைக ளியாவு

     மயர்த்தனன் கறுபு மைந்தன் கோபத்தீ யடங்கி லாதால்.

32

     (இ-ள்) அவ்வாறு சிவக்க, கோபாக்கினியானது தணியாததால் ஹறுபென்பவனது புதல்வனான அந்த அபாசுபியானென்பவன் பெருமூச்சு விட்டான். மனமானது வெம்மை யடையப் பெற்றான். பிரகாசியா நிற்குஞ் சரீரமானது வியர்க்கப் பெற்றான். கருநிறத்தைக் கொண்ட மீசையானது துடிக்கப் பெற்றான். கண்களி லிருந்து நெருப்பைக் கிளப்பினான். பற்களால் அதரங்களைக் கடித்தான். தனது குற்றங்களெல்லா வற்றையு மறந்தான்.

 

4388. சேரலர் பகையு மாயத் திறமையுஞ் சிதைத்தோ ரென்போ

     லாருள ரென்ன வெண்ணி யிருந்தன னெதிரின் வந்து

     போரினை மூட்டி நின்றாய் நீயிங்குப் புகுந்த போதே

     வேரொடுந் தீனை வீழ்த்தி வென்றியும் விளைப்பே னென்றான்.

33

     (இ-ள்) அவ்வாறு மறந்து என்னைப்போலுஞ் சத்துராதிகளது விரோதமு மில்லாமலாகும் வண்ணம் அவர்களது வல்லமையையுங் கெடுத்தவர்கள் யாவருளரென்று நினைத்திருந்தேன். நீ எனது முன்னால் வந்து யுத்தத்தை மூளச் செய்து நின்றாய். அப்படி நீ இங்கு வந்த பொழுதே தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்களை அடியோடும் மாளும்படி செய்து பூமியில் விழுவித்து வெற்றியையு முண்டாக்குவே னென்று சொன்னான்.

 

4389. கேட்டனன் குயைமன் றாங்காச் சீற்றமே கிடந்த வாகத்

     தூட்டின னுவகை யெய்தாப் புதுக்களிப் புடலங் கொண்டான்

     றீட்டுவே லவரை யெல்லாம் போரினிற் சிந்தை யாக்கி

     மீட்டெழுந் தயிலா னென்னு மூரிடை விரைவிற் போனான்.

34

     (இ-ள்) அவன் அவ்வாறு சொல்ல, அதைக் குயையென்னுமரசன் தனது காதுகளாற் கேள்வியுற்றுப் பொறுத்தற் கருமையான கோபமானது கிடக்கப் பெற்ற மனத்தின்கண் சந்தோஷத்தை யருத்தி ஒரு காலத்து மடையாத மகிழ்ச்சியை உடலினிடத்துக் கொண்டு கூர் செய்யா நிற்கும் வேலாயுதத்தை யுடைய அந்தக்