இரண்டாம் பாகம்
வருவானேயானால், அவனோடு எதிர்த்துப்
போராடுவதற்கு நமக்கு வல்லமையில்லை. ஆதலால் அவன் வருவதற்கு முன்னரே நாம் நமது பந்துக்களோடு
நமது ஆயுதங்களை யெல்லாம் போட்டுவிட்டு வஸ்திரங்களுக்குப் பதிலாக மரத்தினது தோல்களை அரையிற்
பொருத்தி மயிரினால் அலங்கரிக்கப்பட்ட சடையை யணிந்து கொண்டு காட்டிற்குச் செல்லுவோம்,
வாருங்கள்.
4384.
அபுசகல் போன பின்ன ராருளர் தலைவ ரென்னப்
புவிபுகழ் கறுபு மைந்த னென்றன புவன மெல்லா
மவையறிந் திவைக ளெல்லா மயர்த்தன மென்னி லையோ
திவளறச் சாலை புக்கத் தெய்வமுங் குடிவிட் டோடும்.
29
(இ-ள்) அன்றியும்,
அபூஜகி லென்பவன் மாண்டுபோன பிற்பாடு தலைமைத் தனத்தை யுடையவராயுள்ளவர் யாவரென்று கேட்க,
இவ்வுலக முழுவதும் இப்பூமியானது போற்றா நிற்கும் ஹறுபென்பவனது புத்திரனான அபாசுபியானென்று
சொல்லின. அதையுணர்ந்து இந்த விஷயங்களையெல்லாம் மறந்தோமேயானால் அந்தோ! திவளா நிற்குந்
தருமசாலையின்கண் தங்கிய தெய்வமுந் தனது இவ்விடத்தை விட்டு மோடா நிற்கும்.
4385.
குலத்தினிற் கிளையிற் சான்றோர் கொள்கையிற் கோதி லாநந்
தலத்தினிற் சமயந் தன்னிற் றள்ளரு மீன மெய்தி
லுலத்தடப் புயத்தீ ருற்ற தொருவர்க்கோ சிறுமை யன்றே
நலத்தமா மனிதர்க் கெல்லா நணுகிய தன்றோ வென்றான்.
30
(இ-ள்) அன்றியும், திரளைக்
கல்லை நிகர்த்த பெருமை பொருந்திய தோள்களையுடைய வீரர்களே! நமது கூட்டத்திலுங் குடும்பத்திலும்
மேலோர்களது கொள்கையிலும், களங்கமற்ற நமதூரிலும் நமது மார்க்கத்திலும் நீக்குதற்கரிய ஓரிழிவானது
வந்து சேர்ந்தால் அவ்வாறுற்ற அவ்விழிவு ஒருவருக்கா? அல்லவே, நன்மையைக் கொண்ட மாந்தர்க
ளெல்லாருக்கும் வந்து பொருந்தின தல்லவா? என்று சொன்னான்.
4386.
என்றலுஞ் சீற்ற மேன்மே லெழுந்தது கரையி லாது
துன்றிய வுரோம மியாவுந் தளிர்த்தன துணையா நின்ற
குன்றெனப் புயங்க ளோடி வளர்ந்தன புருவங் கோட்டித்
தென்றிக ழரிய கண்கள் சிவந்தன தீய தென்ன.
31
(இ-ள்) என்று சொன்ன
மாத்திரத்தில், கோபமானது எல்லையின்றி மேலுமேலு மெழும்பிற்று. நெருங்கிய உரோமங்களனைத்துந்
துளிர்த்தன. துணையாக நின்ற மலையைப் போன்ற இருபுயங்களு மோடியோங்கின. நெருப்பைப் போலுங்
|