இரண்டாம் பாகம்
சாராமல் அவனது பெருமையானது
கெட்டு ஓடும் வண்ணஞ் செய்தார்கள். அப்படிப்பட்டவர்களது வல்லமையில் நூற்றில் ஒரு பங்காயினும்
நாம் செய்திலோம். இனி நம்மாற் செய்ய ஆகுவது யாது? ஒன்றுமில்லை. நமது கீர்த்தியை நாமே கெடுத்துக்
கொண்டோம்.
4381.
ஆதிநூற் சமயம் வீணிற் றேய்வுற வழகி லாது
வாதியா வந்த மார்க்கம் விளங்குற வரைந்த தென்னே
நீதியும் பழிய தாகு நிடறம் பவத்தி னெய்தும்
பேதுற மரபின் வந்த பெரியருஞ் சிறிய ராவார்.
26
(இ-ள்) அன்றியும்,
யாவற்றிற்கும் முதன்மையான வேதங்கள் கூறிய மார்க்கமானது வீணாகத் தேயவும், ஒழுங்கின்றி அதற்கு
வாதியாக வந்த மார்க்கமானது எவ்விடத்தும் பிரகாசிக்கவுஞ் சொன்னது யாது? ஒன்றுமில்லை. ஒரு
வேளை அப்படி அந்த மார்க்கமே விளங்குமேயானால் நியாயங்களும் பொல்லாங்குகளாகும். நீண்ட புண்ணியங்கள்
பாதகத்திற் போய்ச் சேரும். நல்லகுலத்தி லவதரித்த பெரியோர்களும் மயக்கமுறும் வண்ணஞ்
சிறியோராவார்கள்.
4382.
மஞ்சினின் றிழிந்த தாரை மழையெனுஞ் சரங்க ளானும்
விஞ்சையின் விதத்தி னானும் வேண்டிய சூழ்ச்சி யானுந்
துஞ்சிடத் தீனோ ராவி மண்ணினிற் றொலைப்போ மென்ன
வஞ்சினம் புகன்ற தெல்லா மறந்தியாஞ் சொன்ன தாமால்.
27
(இ-ள்) அன்றியும், மேகத்தில்
நின்று மிறங்கிய ஒழுங்கைக் கொண்ட நீரைப் போன்ற அம்புகளாலும் விஞ்சையினது தன்மையாலும் வேண்டிய
உபாயங்களினாலும் அந்தத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்கள் மாளும்படி அவர்களது
பிராணனை இவ்வுலகத்திலில்லாமற் செய்வோமென்று சபதவார்த்தைகள் சொன்ன தெல்லாம் நாம் நினைவோடு
சொன்னதல்ல, மறந்து சொன்னதேயாகும்.
4383.
மனையிடைப் பேதை போலக் கிடந்தன முகம்ம தின்னே
சினமுற வருவ னென்னில் வெருவுறற் றிறமன் றாமு
னினமொடுந் தானை வீழ்த்தி மரவுரி யிடுப்பிற் சேர்த்திப்
புனைமயிர்ச் சடையுந் தாங்கிப் போதுவங் கானில் வம்மின்.
28
(இ-ள்) அன்றியும், நாம்
வீட்டின் கண் பெண்களைப் போல வெளிவராமற் கிடந்தோம். முகம்மதென்பவன் இப்பொழுதே கோபமானது
அதிகரிக்கும் வண்ணம் நாம் பயப்படும்படி இங்கே
|