இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு நிறையவும்,
அழகிய குறைஷிக் காபிர்களும் சிறந்த குணத்தையுடைய ஆடவர்களும் மேலான அறபிகளும் இவ்வுலகத்தினது
நியாயங்க ளெல்லாவற்றையுந் தெரிந்த பெரியோர்களும் வேதங்களைக் கற்றுத் தெளிந்து நிலை பெற்றவர்களுமான
அனைவரும் தனது பக்கத்திற் சூழவும், குற்றமானது ஓங்கா நிற்கு மிதயத்தையுடையவனான அந்தக் குயையென்பவன்
அவர்களைப் பார்த்து நீங்கள் இதைக் கேளுங்களென்று சொல்ல ஆரம்பித்தான்.
4378.
சூரமு மிருப்பத் தேருஞ் சூழ்ச்சியு மிருப்பக் காபி
ரியாருமீண் டிருப்ப வென்றி யரசரு மிருப்ப மற்று
நீருமிங் கிருப்ப வென்போ னேசமு மிருப்ப விந்தப்
பாரினிற் சமய மொன்றுந் தேயுமோ பகையி னொல்கி.
23
(இ-ள்) வீரமிருக்கவும்
யாவையு முணரா நிற்கு நுண்ணிய அறிவானதிருக்கவும் காபிர்களாகிய எல்லாரும் கூட்டமுற்றிருக்கவும்
விஜயத்தைக் கொண்ட வேந்தர்க ளிருக்கவும், நீவிரும் இவ்விடத்திலிருக்கவும் என்னைப் போன்ற
சினேகங்களிருக்கவும், இந்தப் பூமியின் கண் நாம் அனுசரித்து வருகின்ற மார்க்கமொன்றும்
விரோதத்தினால் தளர்ந்து தேயுமா? தேயாது.
4379.
காய்ந்திக றொடங்கி நின்ற வபூசகல் ககுபு வேந்தன்
வீயந்தும்நா மனங்கொள் ளாது வாழ்வினை விருப்ப முற்றாந்
தோய்ந்தன பழியும் பாருஞ் சொல்லின வசையுந் தோன்றத்
தீய்ந்தன பெருமை நாளும் வளர்ந்தன சிறுமை யன்றோ.
24
(இ-ள்) அன்றியும்,
கோபித்து யுத்தத்தை ஆரம்பித்து நின்ற அபூஜகிலென்பவனுங் ககுபென்னு மரசனு மிறந்தும் நாம் யுத்தஞ்
செய்வதற்கு மனங்கொள்ளாமல் நமது வாழ்க்கையை விரும்பினோம். அதனால் நமக்குப் பழியும் வந்து
தங்கிற்று. வசைகளும் விளங்கும் வண்ணம் இவ்வுலகமும் சொல்லிற்று. நமது பெருமையுந் தீய்ந்தது.
பிரதி தினமும் இழிவானது ஓங்கிற்று.
4380.
முன்னவ ரியாருங் கூண்டு முரட்படை முகம்ம தானோ
னிந்நக ரதனிற் புக்கா தீடுபட் டிரியச் செய்தா
ரன்னவர் திறமை நூற்றொன் றாயினு மமைத்தா மின்றே
யென்னினிச் செய்ய லாகு மிசையினை யவித்துக் கொண்டாம்.
25
(இ-ள்) அன்றியும்,
நமக்கு முன்னிருந்தவர்க ளெல்லாரும் ஒன்று சேர்ந்து வலிமையைக் கொண்ட சைன்னியங்களையுடைய அந்த
முகம்மதென்பவன் இந்தத் திருமக்கமா நகரத்தின் கண் வந்து
|