|
இரண்டாம்
பாகம்
செய்கின்ற பனீக்குறைலா
நகரத்திலுள்ள பெண்கள் புருடர்கள் குழந்தைகளோடு
குற்றமற்ற பொருள்களையுங் கொண்டு வந்து கூடினார்கள்.
4659. அக்க
ணத்தஸ் காபிக ளுமெழின்
மிக்க வாய்மை விளங்குமி
யார்களுந்
தொக்க காபிர்த்
தொகுதியுஞ் சூழ்வரக்
கக்கன் றூதர்
கடிதெழுந் தாரரோ.
38
(இ-ள்)
அவ்வாறு வந்து கூட, அல்லா ஜல்ல ஷகுனகுவத்த ஆலாவின் றசூலான
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா
செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்கள் அசுஹாபி மார்களும் அழகு மிகுத்த சத்தியமானது
பிரகாசியா நிற்கும் யார்களும் நெருங்கிய காபிர்களது
கூட்டமும் தங்களை வளைந்து வரும் வண்ணம் வேகமாய்
அக்கணப் பொழுதிலேயே அவ்விடத்தை விட்டும்
எழும்பினார்கள்.
4660.
கான மால்வரை யுங்கடி மாமலர்
நான வாசங் கமழு நதிகளு
மீனு லாவு கழனியு மேவும
தீன மாகிய மாநகர்
சேர்ந்தனர்.
39
(இ-ள்) அவ்வாறெழும்பிச் சோலைகளையுடைய
பெரிய மலைகளும், வாசனையைக் கொண்ட அழகிய
புஷ்பங்களையுடைய நானத்தினது பரிமளமானது பரிமளியா
நிற்கும் ஆறுகளும், மச்சங்களுலாவுகின்ற வயல்களும்
பொருந்திய திரு மதீனமா நகரத்தை வந்து சேர்ந்தார்கள்.
4661. வந்தி
ருந்து பனீகுறை லாக்களைப்
பந்த மாச்சிறை பண்ணுமி
னென்றலுங்
கந்த டர்ந்த களிற்றசு
காபிகள்
சிந்தை கூர்ந்தறை
யிற்சிறை செய்தனர்.
40
(இ-ள்)
அவ்வாறு வந்திருந்து கொண்டு அந்தப் பனீக்குறைலா
வென்பவர்களைக் கட்டாகச் சிறை செய்யுங்களென உத்திரவு
செய்த அளவில், கட்டுத்தறியைப் பொருதுகின்ற யானையை
நிகர்த்த அசுஹாபிமார்கள் மனமகிழ்ந்து அவர்களை
ஓரரங்கின்கண் சிறை செய்தார்கள்.
4662. சிறைசெய்
தோமெனச் சென்றவர் செப்பலு
மிறைகொ ளுங்கடை
வீதியிற் சென்றொரு
சிறையி னிற்குழி
செய்மினென் றுண்மைதே
ரிறைவன் றூத ரினிதி
னியம்பினார்.
41
|