பக்கம் எண் :

சீறாப்புராணம்

1691


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு செய்து அந்த அசுஹாபிமார்கள் போய் நாங்கள் அவர்களைச் சிறை செய்து விட்டோமென்று சொன்ன மாத்திரத்தில், சத்தியத்தை யுணருகின்ற இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நீங்கள் அச்சத்தைக் கொள்ளுகின்ற கடைத்தெருவிற் போய் ஒப்பற்ற கட்டுப்பாட்டில் ஒரு கிடங்கு தோண்டுங்களென்று இனிமையோடுஞ் சொன்னார்கள்.

 

4663. அறையுஞ் சொற்றலை மேற்கொண் டருநெறி

     மறையி னன்முறை யேசெயு மாண்பினோர்

     நிறையும் பீடிகை சென்றோர் நிலத்தினிற்

     குறைவி லாழ்ந்த கொடுங்குழி தொட்டனர்.

42

     (இ-ள்) அவ்வாறு சொல்லிய வார்த்தையை அவர்கள் சிரசின் மீது கொண்டு அருமையான ஒழுங்கையுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது நன்மை பொருந்திய முறைமைப் பிரகாரம் செய்யும் வண்ணம் மாட்சிமையை யுடையவர்கள் மலிந்த கடைவீதியிற் போய் ஒரு தலத்தில் குறைவின்றிப் பள்ளமாகிய கொடிய ஒரு கிடங்கைத் தோண்டினார்கள்.

 

4664. ஆங்க வாற தியற்றி யருமறை

     யோங்கும் வண்மை நபிமு னுரைத்திட

     வாங்கு செல்வ பனீகுறை லாக்கண்முன்

     னீங்கள் சென்று நெருக்கப் படுத்தியே.

43

     (இ-ள்) அவ்விடத்தில் அவ்வாறு அந்தக் கிடங்கைத் தோண்டி அருமையான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தின் கண் ஓங்குகின்ற வளமையைக் கொண்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது சந்நிதானத்தில் வந்து சொல்ல, வாங்கா நிற்குஞ் செல்வத்தையுடைய அந்தப் பனீக்குறைலாக்களினிடத்தில் நீங்கள் போய் அவர்களைப் பலவந்தப்படுத்தி.

 

4665. தோகை மார்மதிச் சூழச்சியின் மைந்தர்கள்

     போக மற்றப் புருடரைக் கூய்ப்பத

     பாக மாச்சில பத்தஞ்சு மாக்கொணர்ந்

     தோகை வேதத்துக் குட்படச் சொல்லுவீர்.

44