|
இரண்டாம்
பாகம்
றலியல்லாகு அன்கு
அவர்களிடத்து வேகமாய்ப் போய்ப் பொருந்திய
இருகண்களாலுங் கருணையோடும் விரும்பிப் பார்க்க,
அவர்கள் மவுத்தானார்கள்.
4676. அன்னநடைச்
சின்னவிடை யாரநகைக்
காரளக
மரிசேர் வாட்கட்
கன்னன்மொழிப்
பொன்னனையார் வயிறலைத்துக்
கண்கலுழ்ந்து கதறி யேங்க
வின்னன்மிகுந்
தியார்களசு காபிகண்மற்
றியாவர்களு மிரங்கி நிற்பப்
பின்னமறச் செயுஞ்சடங்கு
முடிக்கநினைத்
தாரறத்தின் பெற்றி யோரே.
55
(இ-ள்) அவ்வாறு மவுத்தாக, புண்ணியத்தின்
தகுதியையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் அன்னப்பட்சியினது நடையைப்
போன்ற நடையையும், சிறிய மருங்குலையும், முத்துப் போன்ற
பற்களையும், மேகத்தைப் போன்ற கூந்தலையும், இரேகைகள்
பொருந்திய கண்களையும், கரும்பைப் போன்ற
வார்த்தைகளையுமுடைய முண்டகாசனையை நிகர்த்த மாதர்கள்
தங்கள் வயிற்றிலடித்துக் கொண்டு கண்களால் நீரைச்
சொரிந்து கதறி யழவும், யார்களும் அசுஹாபிமார்களும்
மற்ற அனைவர்களும் துன்ப மதிகரித்துக் கசிந்து
நிற்கவும், சிதைவின்றிச் செய்யுஞ் சடங்குகளை
நிறைவேற்றும்படி எண்ணினார்கள்.
4677. அப்பரிசங்
கவர்நினைப்ப வந்தரத்தி
லிருந்துகதி ரனேக கோடி
யொப்பமுற வந்ததென
வுருவுதிகழ்
மலக்குகள்வந் துற்றார் வேதஞ்
செப்புநெறிப் படியாக
மலக்குகளு
மசுகாபித்
திரளுஞ் சூழ
மெய்ப்புகழின் சகுதுதமைத்
தொழுவித்தா
ரடக்குவித்தார் மேன்மை யோரே.
56
(இ-ள்) அவ்விடத்தில் அத்தன்மையாக
அவர்களெண்ண, ஆகாயத்தின் கண்ணிருந்து செவ்வையாக
அனேககோடி சூரியர்கள் வந்தன போலும் வடிவமானது
பிரகாசியா நிற்குந் தேவர்களான மலாயிக்கத்துமார்கள்
வந்து சேர்ந்தார்கள். அப்பால் மேன்மையை
|