பக்கம் எண் :

சீறாப்புராணம்

1695


இரண்டாம் பாகம்
 

     சொல்வசனத் துவமையில்லா னறுசுகுறு

            சசைந்ததின்று தூய்மை பெற்ற

       நல்லவர்க ளெவரேனு மவுத்தான

            தின்றுளதோ நவில்வீ ரென்றார்.

53

     (இ-ள்) அவ்வாறு கொடுத்து நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அவர்களது சைனியங்களுஞ் செல்வத்தோடுஞ் சூழ்ந்திருக்க, ஜிபுரீ லலைகிஸ்ஸலாமவர்களும் மிகவும் விரைவோடு மெழும்பி வந்து “அஸ்ஸலாமு அலைக்கு” மென்று சலாஞ் சொல்லிப் பணிந்து வேதத்தினது வல்லமையையுடைய நபிகட் பெருமானே! கேட்பீர்களாக, இன்றையத்தினம் சொல்லா நிற்கும் வார்த்தைகளாலாகிய உவமானத்தி லடங்காதவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் அறுசுங்குறுசு மாடின. ஆதலால் இன்று பரிசுத்தத்தைப் பெற்ற நன்மையை யுடையவர் யாவரேனும் மவுத்தான துளதோ? அதைச் சொல்லுங்களென்று கேட்டார்கள்.

 

4675. அன்னவரம் மொழியுரைக்க நபியிறசூல்

          மனத்தறிவா லாய்ந்து பார்த்தே

     யுன்னியரு ளுடனெழுந்தி யார்களசு

          காபிகளு மொருங்கு சூழ

     மின்னிலகு மயில்வடிவாள் மகாதுமகன்

          சகுதுதம்பால் விரைவிற் சென்று

     மன்னுமிரு விழியாலன் புடனோக்கிப்

          பார்க்கவவர் மவுத்தா னாரால்.

54

     (இ-ள்) அந்த ஜிபுரீல் அலைகிஸ்ஸலாமவர்கள் அந்த வார்த்தையைக் கேட்க, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களது இதயத்தின் கண்ணுள்ள அறிவினால் ஆராய்ந்து நோக்கி மதித்துக் கிருபையோடு மெழும்பி அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு, உமறுகத்தாபு றலியல்லாகு அன்கு, உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு, அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு, ஆகிய யார்களும், அசுஹாபிமார்களும் ஒன்றாகக் கூடி வளைந்துவரும் வண்ணம் ஒளிவானது விளங்கா நிற்கும் வேலாயுதத்தையுங் கூரிய வாளாயுதத்தையுமுடைய மஆதென்பவரது புதல்வரான சகுது