|
இரண்டாம்
பாகம்
வேயதொகை யாகியதோ
ராயிரத்தைம்
பதின்மரையு மினிய கீர்த்தி
மேயநசு தெனுந்தலத்தில்
விற்றுறைவாட்
குதிரைகொண்டு மீள்வி ரென்றார்.
51
(இ-ள்) அவ்வாறு சொல்ல, சத்தியத்தை
விட்டும் பிசகாத கீர்த்தியையுடைய நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு
றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த
அசுஹாபிமார்களது முகத்தைப் பார்த்துப் பரிசுத்தமான
சன்மார்க்கமற்ற பனீக்குறைலாப் பெண்களுடன் கூடப்
புத்திரர்களுமாகப் பொருந்திய தொகையாகிய ஒப்பற்ற
ஆயிரத்தைம்பது பெயர்களையும் இனிமையான புகழால்
தகுதிப்பட்ட நசுதென்று சொல்லுந் தானத்தில் விற்று
உறையையுடைய வாளுங் குதிரைகளும் வாங்கிக் கொண்டு
திரும்பி வாருங்களென்று சொன்னார்கள்.
4673. அம்மொழியின்
படிசிலபே ரச்சிறைகொண்
டத்தலத்தி
லணுக விப்பாற்
செம்மனபி பனீகுறைலாப்
பொருணாலு
பங்காக்கித் திரிபா றன்னை
வெம்மலைபோல் வாவுபரி
நடத்துமவர்
தமக்களித்து வீர வாட்கொண்
டெம்மருங்குஞ்
சூழ்ந்துநிற்குங் காலாள்கட்
கோர்கூறு
மீந்திட் டாரால்.
52
(இ-ள்)
அச்சொல்லின் பிரகாரமே சில அசுஹாபிமார்கள் அந்தச்
சிறைகளை யழைத்துக் கொண்டு அத் தானத்திற்குச் செல்ல,
இதன் பின்னர், அரசராகிய நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா
காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அந்தப்
பனீக்குறைலாக்களின் திரவியங்களை நான்கு பாகமாகச்
செய்து மூன்று பங்கை வெவ்விய கடலினது திரைகளைப் போலத்
தாவுகின்ற குதிரைகளைச் செலுத்தும் அசுஹாபிமார்களுக்குக்
கொடுத்து ஒரு பங்கை வீரத்தைக் கொண்ட வாளாயுதத்தைத்
தாங்கி எல்லாவிடங்களிலும் வளைந்து நிற்குங்
காலாட்களாகிய அசுஹாபிமார்களுக்குக் கொடுத்தார்கள்.
4674. செல்வமுட
னபியுமவர் சேனைகளுஞ்
சூழ்ந்திருப்பச் செபுற யீலும்
வல்விரைவி னுடனெழுந்து
வந்துசலாஞ்
சொலிவணங்கி மறைவ லாய்கேள்
|