பக்கம் எண் :

சீறாப்புராணம்

1693


மறந

இரண்டாம் பாகம்
 

4669. மறந்தி கழ்ந்த பனீகுறை லாக்கள்கேட்

     டறந்தி றம்பலே மாக்கந் திறம்பலேஞ்

     சிறந்த வெந்நெறிச் செய்கைய தன்றியே

     யிறந்து போகினும் வேறொன் றிசைகிலேம்.                                                               48

      (இ-ள்) அவ்வாறு சொல்ல, அதைப் பாவத்தால் விளங்கப்பட்ட அந்தப் பனீக்குறைலாக்கள் கேள்வியுற்றுச் சிறப்பாகிய எங்கள் மார்க்கத்தின் செய்கையே யல்லாமல் நாங்கள் மாண்டு போனாலும் எங்கள் புண்ணியத்தில் நின்றும் மாறுபடோம். ஆக்கத்தில் நின்றும் மாறுபடோம். வேறொரு காரியத்திற்கு உடன்படோம்.

 

4670. என்று காபி ரியம்பிடச் சீர்கெழு

     வென்றி செய்வய வீரரு ருத்துளங்

     கன்றி நற்கலி மாவுரை யார்களைக்

     கொன்று தீர்ந்து கொடுங்குழி வீழ்த்தினார்.                                                                     49

      (இ-ள்) என்று காபிர்களாகிய அந்தப் பனீக்குறைலாக்கள் சொல்ல, கீர்த்தியானது ஓங்கா நிற்கும் வெற்றியைச் செய்கின்ற வலிமையை யுடைய வீரர்களான அசுஹாபிமார்கள் கோபித்து மனமானது நைந்து நன்மை பொருந்திய கலிமாவைச் சொல்லாதவர்களை வெட்டிக் கொன்று அந்தக் கொடிய கிடங்கின்கண் வீழ்த்தினார்கள்.

 

4671. கடிந்த பேரைக் கணித்தெழு நூற்றின்மேன்

     முடிந்த தாயிரத் துள்ளென்று முன்னியே

     யடர்ந்த வாட்படைக் கையசு காபிக

     ணடந்த செய்தி நபிக்குரை செய்தனர்.
                                                         
50

     (இ-ள்) பொருதுகின்ற வாளாயுதத்தைக் கொண்ட கையையுடைய அசுஹாபிமார்கள் அவ்வாறு வெட்டிய அந்தக் காபிர்களைக் கணிக்கிட்டு எழுநூற்றிற்கு மேலும் ஆயிரத்திற் சுகமும் முடிந்ததென்று கருதி நடந்த சமாச்சாரத்தை நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குச் சொன்னார்கள். 

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4672. வாய்மைதவ றாதபுகழ் முகம்மதசு

        காபிகடம் வதன நோக்கித்

    தூயநெறி யில்லாத பனீகுறைலாப்

        பெண்களொடுஞ் சுதருங் கூட