பக்கம் எண் :

சீறாப்புராணம்

1698


இரண்டாம் பாகம்
 

லுமாமீமான்கொண்ட படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4678. மலக்குகள்விண் ணாடடைய நபியிறசூல்

         மதீனநகர் வாழு நாளில்

     விலக்கரிய வருடமொரு நான்குநிறைந்

         தைந்தாண்டு மேவும் போதி

     லலக்கணுறாச் சுடரொளியா மல்லாவின்

         பணிவிடையா லவனி மீதிற்

     றுலக்கமுற வந்தகச்சு பறுலான

         தின்றுமுதற் றொழுவீ ரென்றே.

1

      (இ-ள்) அவ்வாறு அடக்குவித்துத் தேவர்களான மலாயிக்கத்துமார்கள் வானலோகத்தின்கண் போய்ச்சேர, நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் திரு மதீனமா நகரத்திலிருந்து வாழுகின்ற காலத்தில், தள்ளுதற்கருமையான ஒப்பற்ற வருடமானது நான்கு பூரணப்பட்டு ஐந்தாவது வருடம் பொருந்துகின்ற காலத்தில், துன்பமுறாத சுடரொளியாகிய அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் பணிவிடையினால் இந்தப் பூமியின் கண் விளக்கமுறும்படி வந்த ஹஜ்ஜூத் தொழுகையானது பறுலானது இன்று முதல் அத்தொழுகையைத் தொழுங்களெனவும்.

 

4679. தள்ளரிய மனத்தறிவு தனையகற்றி

         மெய்மயக்கந் தந்து நட்பா

     யுள்ளவரைப் பகையாக்கி யுரைப்பதிவை

         யெனவறியா துரைக்கப் பண்ணுங்

     கள்ளுணவும் வெறிமதுவும் கறாமெனவா

         யத்துவரக் கண்டன் பாகி

     விள்ளரிய மறைப்பொருளை சகுபிகளுக்

         குரைத்தெவர்க்கும் விளக்கி னாரே.

2

      (இ-ள்) நீக்குதற் கருமையான இதயத்தினிடத்துள்ள அறிவை யகலச் செய்து சரீரத்திற்கு மயக்கத்தைக் கொடுத்துச் சினேகிதர்களா யுள்ளவர்களை விரோதிகளாகச் செய்து நாம் பேச வேண்டியவை இவையென்று தெரியாமற் பேசச் செய்யும் கள்ளாகிய உணவும்