பக்கம் எண் :

சீறாப்புராணம்

1699


இரண்டாம் பாகம்
 

மஸ்தைத் தருகின்ற மதுவும் ஹறாமெனவும், ஆயத்தாகிய வேதவசனம் வரத் தெரிந்து அன்பாகிச் சொல்லுதற் கருமையான அந்த வேத வசனத்தினது அருத்தத்தை அசுஹாபிமார்களுக்குச் சொல்லி யாவர்களுக்கும் விளங்கச் செய்தார்கள்.

 

4680. விளம்பிநெறி முறைதவறா வேதநபி

         யவணிருப்ப மிக்க நீதி

     வளம்பலவு முயர்ந்தபுகழ் வளர்ந்தகுண

         நிறைந்தவுலு மாமாண் டெய்தி

     யுளங்களிகூர்ந் தருளுநபி யெவணெனவே

         வினவவிதோ வுற்றா ரென்னக்

     களங்கமற வருகிருந்தோர் சொலவடுத்துக்

         கண்டுசில கழற லுற்றான்.

3

     (இ-ள்) அவ்வாறு சொல்லிச் சன்மார்க்கத்தினது ஒழுங்கிற் பிசகாத புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அத் திருமதீனமாநகரத்தின் கண் ணிருக்க, மேலான நியாயத்தையும், அதிகரித்த பல செல்வத்தையும், ஓங்கிய கீர்த்தியையும், மலிந்த குணத்தையு முடைய உலுமா மென்பவன் அங்கு வந்து மனமானது சந்தோஷிக்கப் பெற்றுக் கிருபை செய்யா நிற்கும் நபிகட் பெருமானாரவர்கள் எங்கே! என்று கேட்க, குற்றமற அங்கே பக்கத்திலிருந்தவர்கள் இதோ! இருக்கின்றார்களென்று சொல்ல, அவர்களது அருகிற் சமீபித்து அவர்களைப் பார்த்துச் சில வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.

 

4681. பேசுபுகழ் தேரபுதுல் முத்தலிபு

         தனக்குரிய பேர னாரே

     மாசறவோர் காரியத்தைத் துடுக்காக

         வுமைக்கேட்க மதித்தே னென்மே

     னேசமுற நீர்கோப மில்லாமற்

          சொலவேண்டு நிசமா மென்னத்

     தேசுறுமெய் நபியவனை வேண்டுவன

          கேளெனவே செப்பி னாரால்.

4

      (இ-ள்) பேசா நிற்குங் கீர்த்தியை யுணர்ந்த அப்துல் முத்தலிபு பென்பவருக்குச் சொந்தமான பேரனாரே! உங்களிடத்துக் களங்கமறும் வண்ணம் வேகமாக ஒரு கருமத்தைக் கேட்கும்படி என் மனதின்கண் கருதினேன். அதனால் நீங்கள் என் மீது கோபமின்றி நேசமானது பொருந்தும் வண்ணம் உண்மையாகச்