|
இரண்டாம்
பாகம்
சொல்ல வேண்டுமென்று சொல்ல,
பிரகாசத்தைப் பொருந்திய திருமேனியையுடைய நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
அவனை நீ உனக்கு வேண்டுபவைகளைக் கேளென்று
சொன்னார்கள்.
4682. ஓதுமொழிக்
கவருவந்த வுண்மைகண்டு
நின்றவிய
லுலுமாம் சொல்வான்
றீதிலா
மறைப்பொருளாய்த் திகழொளியாய்
நிறைந்தஅல்லாச் செகத்தின் மேற்றன்
றூதரா யுமையிருக்க
வனுப்பினதுங்
காலமைந்துந் தொழுக வென்றுங்
காதலுடன் சக்காத்து
நோன்புகச்சும்
பறுலெனவே
கழறு மைந்தும்.
5
(இ-ள்) அவ்வாறு சொல்லிய அந்த
வார்த்தைகளுக்கு நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா
செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா
காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்கள் உவந்த உண்மையைப் பார்த்து நின்ற இயலையுடைய
அந்த லுமாமென்பவன் சொல்லுவான். களங்கமற்ற
வேதார்த்தமாய்ப் பிரகாசியாநிற்கு மொளிவாய்
எவ்விடத்தும் பூரணப்பட்ட அல்லா ஜல்ல ஜலாலகுவத்த
ஆலாவானவன் இப்பூமியின்மீது உங்களைத் தனது றசூலாக
இருக்க விடுத்ததும், ஐந்து நேரமுந் தொழுகவெனவும்,
ஆசையோடும் சக்காத்து, நோன்பு, ஹஜ்ஜூம் பறுலெனவும்
சொல்லும் ஐந்தும்.
4683. மெய்யாமோ
சரதமெனி லிறையவன்றன்
மேலாணை
விளம்பு மென்னப்
பொய்யாத நபிவசன
மைந்துக்கைந்து
தரமிறைமேற் புகன்றா ராணை
யய்யாநீர் சொன்னதுண்மை
யெனவுலுமா
மீமானி
லாகி நெஞ்ச
மையாருங் குபிர்நீக்கிக்
கலிமாவு
மொழிந்துமறை வழிநின் றாரே.
6
(இ-ள்) உண்மையா? அது உண்மையென்றால்
யாவருக்கும் இறைவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த
ஆலாவின்மீது சத்தியஞ் செய்யுங்களென்று சொல்ல,
பொய்க்காத நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா
அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல்
|