பக்கம் எண் :

சீறாப்புராணம்

1747


இரண்டாம் பாகம்
 

சீத்திகு றலியல்லாகு அன்கு, உமறுகத்தாபு றலியல்லாகு அன்கு, உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு ஆகியோர்கள் நான்கு பெயர்களையும், நெருங்கிய வெவ்விய கோபத்தையுடைய சைனியங்களாகிய அசுஹாபிமார்களையும் போய்க் கூப்பிட்டு இங்கே தருவீராக வென்று கட்டளை செய்தார்கள்.

 

4802. ஏவு மின்னரு ளாலெளி யேன்செய்த

     பாவ மற்றன னென்று பரிந்தடி

     சேவை செய்து விரைந்துசென் றந்நகர்

     மேவு மன்ன ரெவர்க்கும் விளம்பினார்.

4

      (இ-ள்) அவ்வாறு கட்டளை செய்த இனிய அருளினால் அவர்கள் எளியேனாகிய யான் செய்த பாவமானது அறப் பெற்றேனென்று சொல்லி அன்புற்று அவர்களுக்குப் பாதவூழியஞ் செய்து வேகமாய்ப் போய் அந்தத் திரு மதீனமாநகரத்தின் கண் தங்கிய அரசர்க ளனைவர்களுக்குஞ் சொன்னார்கள்.

 

4803. ஏர்கு லாவியி யார்களு நாண்மலர்த்

     தார்கு லாஅசு காபிக டம்மினாற்

     பேருங் கீர்த்தியும் பெற்றுயர் நீதியா

     லூரு நாடு முவந்திடு முண்மையார்.

5

      (இ-ள்) அழகானது குலாவிய யார்களும் அன்றலர்ந்த புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையானது குலாவுகின்ற அசுஹாபிமார்களில் நல்ல பேருங் கீர்த்தியும் பெற்று ஓங்கிய நியாயத்தினால் ஊரும் நாடும் விரும்பா நிற்கும் உண்மையை யுடையவர்களும்.

 

4804. ஆற்றன் மிக்கவ ராயிர மேலுநா

     னூற்றி லக்க முடையரு நோன்கழ

     லேற்ற மிக்க நபியிற சூலினைப்

     போற்றி வந்து புடைசெறிந் தீண்டினார்.

6

      (இ-ள்) வலிமை மிகுத்தவர்களுமான ஆயிரத்திற்கு மேலும் நானூறாகிய எண்ணையுடைய அசுஹாபிமார்களும் பெருமை பொருந்தி வீரக்கழலினது ஏற்றத்தால் மேன்மைபட்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் புகழ்ந்து வந்து பக்கத்தில் நெருங்கிக் கூடினார்கள்.