முதற்பாகம்
பொழிப்புரை
சிறப்பினை
யுடைய பொருளாய்க், கருத்தா னுணரு முருவமாய் யாவனொருவன் அறி வானே தெளிவு பெற்றவிடத்தும் இத்தன்மைத்தாமென
நினைக்கப்படாத அருவமே யுருவமாய்,
வெளியுரு வல்லாத உள்
ளுருவாய், அகத்தின் கண்ணும் புறத்தின் கண்ணுந் தன்னியலே யன்றிப் பிற வியலில்ல தாக;
அளவையுளடங்காத பேரின்பத்தானாய ஒப்பற்ற வுருவமாய், இல்லாமையிலிருந்து உள்ளதாந் தன்மையைத்
தோன்றச் செய்த பேரொளியாய், உயர்ந்த காவற் பாட்டினை யுடைய ஆதி நாயகனை (அல்லாகுத்த ஆலாவை
என்றபடி) யாம் வணங்கிக் கருதித் துதிப்பாம்.
உருவாத லென்பது
பொருளாத லாக லானும் அப்பொருட்கோ ரொப்பது மிக்கது மின் றென்னுஞ் சிறப்புத் தோன்றத் திருவென்னு
மடை கொடுத்தமை யானும், திரு வுருவாயென்பதற்குச் சிறப்பினை யுடைய பொருளா யென யாமுரை கூறினாம்.
ஆசிரியர் தாமே ழுசிறந்த மெய்ப் பொருளைழு எனப் பின்னுங் கூறு மாற்றானு மறிக. அப்பொருடான்
இனைத்தென்றுரைக்கப்படாது கருத்து வகை யானறிதன் மாலைத்தாகலின், உண ருருவா யென்றார். எத்துணை
முற்ற கற்றாரும் வரை யறுத்தற் கமையாவொன்றாகலின், அறிவினொடு தெளிவிடத்துஞ் சிந்தி யாத வென்றார்.
ஈண்டு ஒரு வுருபு கருவிப் பொருளில் வந்தது. ழுஊசி யொடு குயின்ற தூசுழு என்றாற் போல. சிந்திக்கப்
படாத வென்பது சிந்தி யாத வெனப் படு சொல்லற்றுப்படு பொருளேற்று நின்றது. உரு வின்மை தானே
யதனுருவமா மென்பார் அரு வுருவா யென்றார். இவற்றுப் பின்னர்க் கூறு முரு மூன்றும் இதன் அநுவாதம்.
அகமு மென்னு மும்மை தொக்கு நின்றது. அகம் புற மென்றது பாத்தின் லாகிறுகளை. இன்மையென்றது அதம்.
உண்மை யென்றது உஜூது. இதனை விரிப்பிற் பல்குமாகலின், உய்த்துணர்க. யாவும் அப்பொருளிடத்தே
சேர்தன்மாலையவாகலின், ஈண்டு மருவுத லென்றது சேர்தற் பொருட்டு. வளர் இறந்த காலவினைத் தொகை,
முதலவன் ஆக்கலழித்தல் காத்த லென்னு முத்தொழிலினனாயினும், ஈண்டுக் காவன் முதலவ னெனக் காத்தற்
றொழிலைக் கூறினார், இந்நூலினது முடிவான் காத்தல் கருதி யென்க. மனம் வாக்குக் காய மென்னு
முப்பொறிகளுமொப்ப முடிதற் பொருட்டுப் பணிந்து, உள்ளி, வாழ்த்துவா மென்றார்; பணிதல் காயத்தானும்,
உள்ளுதல் மனத்தானும், வாழ்த்துதல் வாயானுமாகலின், யாமென்பது அவாய் நிலையான் வந்தது. வாழ்த்துவாம்
தன்மைப் பன்மை முற்று, ஏகாரம் ஈற்றசை.
இச்செய்யுட்கு
உரை பின்னும் விரிப்பின் மிகப் பல்குமாகலின் ஒருவாறு சுருக்கி முடித்தாம். பிறவு முய்த் துணர்ந்து
கொள்க.
|