பக்கம் எண் :

சீறாப்புராணம்

212


முதற்பாகம்
 

517. கருவிளை வரிவிழிக் கன்னி யாமினா

    வரியமெய் நடுக்கமுற் றவலித் தேங்கவே

    சுரமென வொருபகை தோன்றித் துக்கமுற்

    றிரவலர் போற்றனி யிறந்திட் டாரரோ.

36

     (இ-ள்) ஆங்குபோய்ச்சேரவே, கருவிளைப் புஷ்பம் போலும் இரேகைகள் படர்ந்த கண்களையுடைய ஆமினா அவர்கள் தங்களின் அரிய சரீரமானது நடுக்கமுற்று வருந்தியழுதிடும்படி சுரமென்ற ஒரு சத்துருத் தோன்றித் துன்பமடைந்து ஏகமாய் அகதிகளைப் போல நிரியாணமாயினார்கள்.

 

518. அரசர்நா யகநபிக் காண்டோ ராறுட

    னொருதிருத் திங்களு நிறைந்த தோதிய

    வரிதினிற் கணக்கிலக் காக வாண்டுமோ

    ரிருபஃ தாமினா விறந்த காலமே. 

37

     (இ-ள்) அவ்வாறு ஆமினா அவர்கள் நிரியாணமான காலத்தில் அவர்களுக்கு அரிதாகச் சொல்லி ஒப்பற்ற எண்ணினது மொத்தக் குறிப்பின் வயது இருபது. அப்போது மன்னாதிபரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக் கழகிய வயசானவை ஆறுடன் ஒரு மாதமும் பூரணப்பட்டன.

 

519. தாயிறத் தலுமனஞ் சலித்துச் சஞ்சலத்

    தீயினிற் கிரிமியிற் றிடுக்கிட் டேங்கியே

    மாயிரும் புவியிடை தனித்து மன்னுயிர்

    போயின தெனநினை வறப்பு லம்பினார்.

38

     (இ-ள்) நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அவ்விதம் தங்களது மாதாவாகிய ஆமினா அவர்கள் இறந்த மாத்திரத்தில் மனமானது சலனமுற்றுக் கவலையினால் அக்கினியின் கண்ணிட்ட புழுவைப் போலத் திடுக்கமடைந்து அழுது மகத்தான பெரிய இந்தப் பூமியின்கண் ஏகமாய்த் தங்கள் சரீரத்திற் பொருந்திய ஜீவனானது நீங்கிப் போய்விட்டதென்று சொல்லும்படி மயக்கத்துடன் கதறினார்கள்.

 

520. சிறுகுடி யெனுமபு வாவிற் சேர்ந்தவர்

    மறைநபி முகம்மதின் வாட்டந் தேற்றியே

    குறைவறாக் கற்பெனுங் கோதை மாதினை

    யறைமறை முழக்கொடு மெடுத்த டக்கினார்.

39

     (இ-ள்) அங்ஙனம் கதறவே, சிற்றூரென்று சொல்லும் அந்த அபுவாவின்கண் பொருந்திய மனிதர்கள் வேதத்தினையுடைய நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அவர்களின் மெலிவை விட்டும் தேறும்படி செய்து குற்றமற்ற கற்பே