பக்கம் எண் :

சீறாப்புராணம்

213


முதற்பாகம்
 

யுருக்கொண்ட தென்னும் பூமாலை யணிந்த கூந்தலை யுடைய பெண்ணாகிய ஆமினா அவர்களை ஓதாநிற்கும் வேதவாசகத்தி னோசையுடன் எடுத்து அடக்கம் பண்ணினார்கள்.

 

     521. ஒலிபுனற் றடத்தபு வாவி லுள்ளவர்

        கலியிரு டுரந்தசெங் கவிகை வள்ளற

        னலிதலைப் போக்கிமக் காவை நாடியே

        வலிதினிற் பாசுரம் வரைந்திட் டாரரோ.

40

     (இ-ள்) அவ்விதம் அடக்கம் பண்ணிய பின்னர் சத்திக்கா நிற்கும் ஜலத்தினது குளங்களையுடைய அந்த அபுவாவென்னுஞ் சிற்றூரிலுள்ளவர்கள் வறுமையாகிய அந்தகாரத்தை யோட்டிய செவிய குடையினையுடைய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் வாட்டத்தையொழித்துத் திருமக்கமா நகரத்தின் கண்ணுள்ள அந்நபிகணாயக மவர்களின் பந்துக்களை எண்ணி வலிதினிற் கடிதமொன்று எழுதினார்கள்.

 

     522. சிலைநுத லாமினா விறந்த செய்தியின்

        மலைவுறு வாசகங் கண்டு வாய்ப்புலர்ந்

        தலைகுலைந் தப்துல்முத் தலிபு மன்றுதன்

        னிலைதடு மாறியுள் ளறிவு நீங்கினார்.

41

     (இ-ள்) அங்ஙனம் அனுப்பவே; அப்துல் முத்தலிபவர்கள் விற்போலும் நெற்றியையுடைய ஆமினா அவர்கள் நிரியாணமான சரித்திரத்தை யுடைய அக்கடிதத்தினது மயக்கம் பொருந்திய வாசகத்தை அன்று வாசித்துப் பார்த்து தங்களது வாயானது உலரப் பெற்று அலைகுலைந்து நிலைமை குழம்பிச் சிந்தையின்கண் தங்கிய அறிவானதும் அகலப் பெற்றார்கள்.

 

     523. மனத்துலை கவலையை மாற்றித் தன்னுயி

        ரினத்தவர் சிலர்தமக் கிசைந்த வாசக

        மனைத்தையு முரைத்தபு வாவிற் போய்நபி

        தனைச்சிறு பொழுதினிற் றருக வென்றனர்.

42

     (இ-ள்) அவ்வாறு அறிவானது அகலப் பெற்ற அப்துல் முத்தலிபவர்கள் பின்னர்த் தெளிவடைந்து தங்களது மனசின்கண் வருத்திய சஞ்சலங்க ளெல்லாவற்றையு மொழித்துத் தங்களின் ஜீவனுக்குச் சரியான பந்துக்களிற் சில பேர்களுக்கு அங்கு பொருந்திய வார்த்தைகள் முழுவதையும் கூறி நீங்கள் அபுவாவென்று சொல்லும் அச்சிற்றூரின்கண் சென்று நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைச் சொற்ப தினத்தினகம் எனதுபால் கொண்டு வந்து தருவீர்களாக வென்று சொன்னார்கள்.