பக்கம் எண் :

சீறாப்புராணம்

256


முதற்பாகம்
 

647. மருக்கொள் பூதர புயநபி முகம்மது மனையிட மகிழ்கூர

    விருக்கு மெல்லையி லெல்லவன் புகுந்திர விருள்பரந் திடுகாலைக்

    கருக்கு மைவிழி துயிறரு பொழுதொரு கனவுகண் டனர்நூலிற்

    சுருக்கு நுண்ணிடைப் பொலன்றொடித் திருந்திழைச் சுடர்மணிக் கதிசாவே.

51

     (இ-ள்) அவ்விதஞ் சொல்லி வாசனைகொண்ட மலைபோலுந் தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் மகிழ்ச்சி பெருகும்படி தங்களது வீட்டின்கண் ணிருக்கின்ற காலத்தில், சூரியனானவன் மேல்பாற்கடலிற் போய்ப்புகுந்து இரவினது அந்தகாரமானது எவ்விடமும் பரவிய சமயம் நூலைப்பார்க்கிலும் சுருங்கிய நுட்பமான இடையினையும் பொன்னாலான வளையல்களையும் திருந்திய ஆபரணங்களையுமுடைய பிரகாசம் பொருந்திய இரத்தினமாகிய கதீஜா அவர்கள் கருக்காநிற்கம் அஞ்சனந் தீட்டிய கண்களானவை நித்திரைசெய்கின்ற போது ஒரு சொப்பனத்தைக் கண்டார்கள்.

 

648. நிறையும் வானக மலர்தரு முடுவின நிரைவிடுத் தெளிதாகக்

    கறையி லாக்கலை முழுமதி மடிமிசை கவினொடு விளையாட

    மறைவி லாதுகண் டணிதுகில் கொடுதனி மகிழ்வொடு பொதிவாகக்

    குறைவி லாதுரத் துடனணைக் கவுமகங் குளிரவு மிகத்தானே.

52

     (இ-ள்) ஆகாயத்தின்கண் பெருகாநிற்கும் விரிந்த நட்சத்திரக் கூட்டங்களினது வரிசையை விட்டும் நீங்கிக் குற்றமற்ற கலைகளையுடைய பூரணச் சந்திரன் இலேசாகவிறங்கி தங்கள் மடியின்மீது அழகுடன் விளையாடும்படித் தெள்ளிதாய்ப் பார்த்து அதைக் குறைவில்லாது ஒப்பற்ற மகிழ்ச்சியோடும் தாங்கள் தரித்திருந்த வஸ்திரத்தைக் கொண்டு வலிமையுடன் பொதிவா யணைக்கவும், மனமானது மிகக் குளிர்ச்சியடையவும்.

 

649. கண்ட காரண மாதுல னெனவரு கலைவல னொடுகூற

    விண்டு கூர்த்திடப் பார்த்தனன் றெளிந்திவர் விரைமலர் முகநோக்கி

    வண்டு லாம்புய நபியுனை யிதமுற மணமுடித் திடநாடிக்

    கொண்ட தாமிதென் றோதிட வுடலகங் குளிர்ந்திருந் திடுநேரம்.

53

     (இ-ள்) அவ்வாறு கதீஜா அவர்கள் சொப்பனத்தில் கண்டிடுங் காரணங்களைத் தங்களுக்கு மாமனென்று சொல்லும்படி