முதற்பாகம்
ஈனமாகிய ஊறடைந்து
அவ்வூறுகளிலிருந்து மிரத்தங்களெழும்பிப் பிரவாகித்தன.
721. அடிபட்டட
வித்திர ளத்தனையும்
பொடிபட்ட
துருண்டு புரண்டுவயின்
மடிபட்டொரு
கற்குவை வாயினிடைக்
கடிபட்டது
பட்டது கட்செவியே.
22
(இ-ள்)
அன்றியும், அச்சர்ப்பமானது அந்தத் துரும்பினால் அடிபட்டு அதைச் சகிக்க முடியாமல் பூமியின்கண்
உருண்டு புரண்டதினால் அங்குள்ள வனத்திரள்கள் முழுவதும் தூளாயின. மேலும் தனது வயிறானது மடிப்பைப்
பொருந்தி ஒரு கற்றிடர் வாயின்கண் கடிப்பட்டது. உடனே அதுவும் மாண்டு போய்விட்டது.
722. வரைபோலுர
கத்தை வதைத்ததுகண்
டிரைவோடுபு
கழ்ந்திவர் செங்கனிவா
யுரையூடொழு
கிச்செலு மென்றுவகைத்
திரையூடு
குளித்தனர் தேசிகரே.
23
(இ-ள்)
தேசாந்தரியாகிய அவ்வியாபாரிகளனைவரும் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் மலைபோன்ற அச்சர்ப்பத்தை அவ்வாறு கொன்றதைப் பார்த்து ஓசையுடனவர்களைப் புகழ்ந்து
யாவர்களும் இவர்களது கனிபோன்ற வாயின் கண்ணிருந்து உதயமாகா நிற்கும் வார்த்தைகளுக் கொழுகி
நடவுங்களென்று சொல்லிச் சந்தோஷமாகிய சமுத்திரத்தின்கண் முழுகினார்கள்.
|