முதற்பாகம்
(இ-ள்) அவ்வாறு
தங்களுக்கு எதிராக ஓடிவந்த அம்மனிதன் சொல்லிய வார்த்தைகளையும் அதைக் கேட்டு மற்றவர்கள்
வருத்தமுற்றுத் தங்களது ஜீவனானது துடித்திடும்படி நிற்பதையும் சந்திரனைப் பார்க்கிலும் மிகுந்த
அழகினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் பார்த்துத் தாங்கள் ஏறியிருந்த
ஒட்டகத்தை முன்னே செலுத்தாது அதைவிட்டும் பூமியின் கண்ணிறங்கினார்கள்.
718. அதிர்கொண்டது நாசியி லங்கியெழக்
கொதிகொண்டுறு கோபம தாயரவஞ்
சதிகொண்டு
நடந்தது தாரையிலென்
றெதிர்கொண்டன ரெங்கண் முகம்மதுவே.
19
(இ-ள்)
அவ்விதமிறங்கி அந்தச் சர்ப்பமானது குமுறொலி பெற்று நாசியினது இருதுவாரங்களிலுமிருந்து
அக்கினியானது எழும்பும்படி வெப்பத்தையடைந்து பொருந்திய சினத்துடன் சதிவுகொண்டு பாதையின்கண்
நடந்துவருவதென்று எங்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் முன்கொண்டு நடந்து
போனார்கள்.
719. அரிகண்டு
வெகுண்டடல் வாயினைவிண்
டெரிகொண்ட
விழிக்கன லிற்றுவிழ
விரிகின்ற படத்தை விரித்துவிடஞ்
சொரிகின்ற
தெனத்திசை தூவியதே.
20
(இ-ள்)
அவ்வண்ணம் நபிகள் பெருமானவர்கள் எதிர்த்து வருவதை அந்தச் சர்ப்பமானது பார்த்துக்
கோபித்து வலிமைதங்கிய வாயைத் திறந்து பிரகாசத்தைக் கொண்ட இரண்டு கண்களிலுமுள்ள
அக்கினியானது முரிந்து விழும்படி விரியாநிற்குந் தனது படத்தை விரியும்படிச் செய்து
மழைபொழிகின்றதுபோல எண்டிசைகளிலும் விடத்தைப் பொழிந்தது.
720. கழிகின்ற
துரும்பொரு கைமுழமுண்
டெழில்கொண்ட முகம்ம தெடுத்தெதிரே
வழிகொண்டதை
வீசிட வல்லுடல
மிழிகொண்டு
திரங்க ளெழுந்தனவே.
21
(இ-ள்)
அப்போது ஒரு கை முழத்தின் நீளமுள்ள கழிந்து போகின்ற ஒரு துரும்பானது அவ்விடத்திலுள்ளது.
அத்துரும்பை அழகுபெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தங்கள் கையினால் எடுத்துப்
பாதையின்கண் எதிராக நடந்து சென்று அச்சர்ப்பத்தை வீசிட, அச்சர்ப்பத்தின் சரீரமானது
|