பக்கம் எண் :

சீறாப்புராணம்

284


முதற்பாகம்
 

      (இ-ள்) ஒரு சர்ப்பமானதுண்டு, அது ஒட்டகங்களும் குதிரைகளும் துதிக்கையினைப் பொருந்திய யானைக் கூட்டங்களும் தனது முன்னால்வர அவைகளை அருந்திடும். அன்றியும், அச்சர்ப்பத்தின் வால் தொடுத்துத் தலைவரையுமுள்ள நீளத்தை வலிமை பொருந்திய நாவினால் எடுத்துச் சொல்லுவதும் அரிதாகும்.

 

     714. கண்ணின்கன லுங்கடை வாய்புரளப்

        பண்ணுங்கவை நாவொடு பற்களுறும்

        வண்ணந்தனை யோதிட வானவருந்

        துண்ணென்றுட லங்க டுணுக்குறுவார்.

15

     (இ-ள்) மேலும் அச்சர்ப்பத்தின் கண்களிலிருந்து உண்டாகும் அக்கினியையும் கடைவாயிற் புரளும்படி செய்யும் பிளவு தங்கிய நாவினையும் பற்களிற் பொருந்தியிருக்கும் வண்ணத்தையும் எடுத்துச் சொல்லத் தேவர்களுந் தங்களது சரீரங்கள் துண்ணென்று பயங்கரமடைவார்கள்.

 

     715. திருகுஞ்சின மாயது சீறிவெகுண்

        டிருகுன்று கடந்தென தின்னுயிரைப்

        பருகும்படி வந்தது பாருமதோ

        வருகின்றது காணென மாழ்கினனால்.

16

     (இ-ள்) அன்றியும், அந்தச் சர்ப்பமானது முறுகிய கோபத்தை உடையதாய்ச் சீற்றமுற்றுச் சினந்து இனிமைதங்கிய எனது உயிரைச் சாப்பிடும்படியாக பெரிய மலைகளைத் தாண்டி வந்தது. அதோ! வருகின்றது பாருங்களென்று சொல்லி மயக்கமடைந்தான்.

 

     716. அலைவுற்றவ னம்மொழி கூறிடலு

        நிலையற்றவர் நின்று நினைந்துநினைந்

        துலைவுற்றுட லங்க ளொடுங்கிமன

        மலைவுற்று மயங்கி வருந்தினரே.

17

     (இ-ள்) வருத்தமுற்றவனான அம்மனிதன் அவ்வாறு அந்த வார்த்தைகளைச் சொன்ன மாத்திரத்தில், அதை அவ்வியாபாரிகளனைவரும் காதுகளினாற் கேள்வியுற்றுத் தங்களது நிலைபரத்தையொழிந்து அவ்விடத்தில் தானே போகாமல் நின்று அச்சர்ப்பத்தை யெண்ணியெண்ணிச் சரீரங்கள் நடுங்கி யொடுங்கி மனமானது மாறுபாடாய் மயங்கித் துன்பமடைந்தார்கள்.

 

     717. வந்தானுரை செய்தது மற்றவர்க

        ணொந்தாவி பதைத்திட நோக்கினரா

        லுந்தாதுறு பாதையி லொட்டகம்விட்

        டிந்தாரெழில் வள்ள லிறங்கினரே.

18