பக்கம் எண் :

சீறாப்புராணம்

303


முதற்பாகம்
 

      (இ-ள்) வண்டுகளானவை பசிய தேனையுண்டு கீதம் பாடாநிற்கும் ஒள்ளிய புஷ்பமாலையணிந்த புயங்களையுடைய வள்ளலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அவ்விதம் சர்ப்பமானது ஒன்றுண்டென்று சொல்லும் வார்த்தையானது தங்களின் காதுகளில் நுழையவே; தங்களது கூட்டத்தார்களை நோக்கி நீங்களனைவரும் புறமயிரையுடைய குதிரை முதலிய மிருகங்களுடன் பின்னால் வாருங்களென்று சொல்லி, அக்கூட்டத்தைவிட்டுந் தாண்டி காட்டின் கண்ணுள்ள அப்பாதையின் முன்னால் நடந்து போனார்கள்.

 

771. சீத வொண்புனற் குட்டமுந் துடவையுஞ் செறிந்த

    பாதை நீந்தியங் கொருகுவ டடியினிற் படரக்

    கோது கோடைமா ருதமுயிர்த் துணங்குகுன் றனைய

    தீது றுங்கொலைப் பாந்தளைக் கண்டனர் திறலோர்.

4

     (இ-ள்) அவ்வாறுபோன வெற்றியை உடையவர்களான நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் குளிர்ச்சி தங்கிய ஒள்ளிய நீரையுடைய குளங்களுஞ் சோலைகளும் நெருங்கிய அப்பாதையைக் கடந்து அவ்விடத்திலுள்ள ஒப்பற்ற மலையினது அடிவாரத்திற்சென்று கோடைகாலத்தி லுண்டாகும் பெரிய காற்றைப் போலக் குற்றத்தையுடைய மூச்சுகளை எவ்விடங்களிலும் எறிந்து ஒசியாநிற்கும் மலைக்கொப்பான தீமைபொருந்திய கொலைத் தொழிலமைந்த அந்தச் சர்ப்பத்தைத் தங்களது கண்களினாற் பார்த்தார்கள்.

 

772. கண்க ளக்கினிக் குவையெனப் பொருதிசை கதுவ

    மண்க ளெங்கணு மிருளுற நச்சுமா சுமிழ்ந்து

    விண்கொ ளும்பிறைக் கீற்றென வெள்ளெயி றிலங்கப்

    புண்கொ ளுங்கடை வாய்சவை நாவிடை புரள.

5

     (இ-ள்) கண்களானவை நெருப்புக் கூட்டத்தைப்போலப் பொருந்திய வெண்டிசைகளிலும் நீங்காது பற்றவும், பூமி முழுவதும் அந்தகாரமுறும்படி நஞ்சாகிய மாசைக் கொப்பளித்து ஆகாயத்தின்கண் சார்ந்த சந்திரனது கீற்றைப்போல வெள்ளியபற்கள் பிரகாசிக்கவும் புண்களைப் பெற்றக் கடைவாயின்கண் பிளவையுடைய நாவானது புரளவும்.

 

773. புள்ளி வட்டவெண் பரிசைக ளெனவுடல் போர்ப்பத்

    தள்ளி வாலசைத் திடுதலிற் றரையிடம் பிதிர்த்திட்

    டள்ளி விட்டெறிந் தெனத்திசை திசைதுக ளடைய

    விள்ள ருஞ்சிரச் சூட்டொரு கதிரினும் விளங்க.

6

     (இ-ள்) வெண்ணிறத்தையுடைய புள்ளிகள் வட்ட வடிவைக் கொண்ட பரிசைகளைப் போல சரீரத்தை மூடவும், வாலைத் தள்ளியசைப்பதினால் பூமியினிடத்தைப் பிதிர்த்துக் கைகளினால்