முதற்பாகம்
வாரிவிட்டெறிந்ததைப்
போலத் தூசிகள் திசைகடோறும் நெருங்கவும், சொல்லுதற்கரிய தலையின்கண்ணுள்ள பூவானது ஒப்பற்ற
சூரியனைப் பார்க்கிலும் அதிகமாய்ப் பிரகாசிக்கவும்.
774.
கண்டு தம்மனத்
திடையினி லொருபயங் கரஞ்சற்
றுண்ட தில்லைகொ
லென்னவந் துதித்துவந் நொடிக்கு
ளண்டர் போற்றிய
முதலிறை யவன்றிரு வருளாற்
கொண்டு சத்தமொன்
றெழுந்தது குவலயங் குலுங்க
7
(இ-ள்)
அவ்விதமான சர்ப்பத்தை நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் பார்த்துத் தங்களது
மனசின்கண் ஒரு பயங்கரமானது கொஞ்சம் உண்டோ? அது இல்லையோ? வென்று சொல்லும்படியாக வந்து
தோன்றிய அந்த க்ஷணநேரத்தினகம் தேவர்கள் போற்றாநிற்கும் ஆதியிறைவனான அல்லாகு
சுபுகானகுவத்த ஆலாவின் திருவருளைக் கொண்டு ஒரு சத்தமானது பூமி முழுவதும் குலுங்கும் வண்ணம்
ஆகாயத்தின் கண்ணிருந்தெழும்பினது.
775.
முகம்ம தேயும
தடியிணை காணவிவ் வழியி
னிகரில் வாளர
வடைந்தது பயங்கர நினையா
தகம கிழ்ந்திடச்
செலுமென வரசர்கோன் களித்துப்
புகர றத்தனி
நடந்தடுத் தனர்புயங் கனையே.
8
(இ-ள்)
முகம்மதுவே! உம்முடைய இரண்டு பாதங்களையும் தெரிசிக்கும்படியாக ஒப்பில்லாத பிரகாசத்தையுடைய
அந்தச் சர்ப்பமானது இப்பாதையின்கண் வந்து சேர்ந்தது. ஆதலால் நீவிர் உமது மனசினகம்
பயங்கரத்தை நினையாமல் களிப்புறும்படி அதன் முன்னால் நடந்து போகுமென்று அவ்வசரீரியான
வார்த்தையானது ஆகாயத்தின் கண்ணிருந்து முண்டாகவே மன்னாதிபரான நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்கள் சந்தோஷமடைந்து குற்றமான தொழியும்வண்ணம் ஏகமாய் நடந்துபோய்
அச்சர்ப்பத்தை நெருங்கினார்கள்.
776.
இரைந்து மூச்சொடுங்
கிடந்தகட் செவிதலை யெடுத்து
விரிந்தெ
ரிந்தகட் கடையினான் முகம்மதை விழித்துத்
தெரிந்து
நோக்கிநம் மிறையவன் றூதெனத் தெளிந்து
வருந்து துன்பமின்
றொழிந்தன மெனமகிழ்ந் ததுவே.
9
(இ-ள்)
அவ்வாறு நெருங்கவே இரைதலுற்று மூச்சோடுங்கிடக்கப் பெற்ற அந்தச் சர்ப்பமானது தனது தலையைத்
தூக்கி அக்கினியானது பரவிச் சுவாலித்த கடைக் கண்களினால் அந்நபிகணாயகம் முகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைச் சமீபத்தில் விழித்துத் தெரிந்து பார்த்து இவர் நமது
இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின்
|