பக்கம் எண் :

சீறாப்புராணம்

305


முதற்பாகம்
 

றசூல்தானென்று மனசின்கண் சந்தேகமில்லாது தேறுதலடைந்து இன்றோடு நாம் வருந்தாநின்ற வருத்தங்களெல்லாவற்றையும் ஒழிந்தோமென்று சொல்லிச் சந்தோஷமடைந்தது.

 

777. மலைகி டந்துயர்ந் ததையென விரிந்தவாய் பிளந்து

    தலையெ டுத்துநா விரண்டினா லொருசலாஞ் சாற்றி

    நிலைய சைந்தொளி நெட்டுடல் குழைந்திட நெளிந்து

    பலபொ றிப்படந் தரைபடப் பணிந்துபின் பகரும்.

10

     (இ-ள்) அவ்விதம் சந்தோஷமடைந்த அந்தச்சர்ப்ப மலையானது கிடந்துயரப் பெற்றதைப் போலத் தனது தலையைத் தூக்கி விரிந்த வாயினைத் திறந்து இரண்டு நாவினாலும் ஒப்பற்ற சலாஞ் சொல்லித் தன்நிலை பரத்தை அசைந்து பிரகாசத்தையுடைய நெடிய சரீரமானது வளைந்திடும்படியாக நெளிந்து பலவிதப் புள்ளிகள் படர்ந்த படமானது பூமியின்மேற் படும்படித் தாழ்ந்துப் பின்னர் சொல்லும்.

 

778. கோல வார்கழற் குரிசினும் மடிக்கொழுங் கமலத்

    தால னேகமென் போலஃ றிணைக்கொடுஞ் சாதி

    சீல மேவிய பதமுறு மென்பதைத் தெளிந்தெக்

    காலங் காண்குவ னெனக்கிடந் தனனெடுங் காலம்.

11

     (இ-ள்) அழகிய நேர்மையான சரணங்களையுடைய குரிசிலாகிய நபிகள் பெருமானே! தங்களின் செழுமைதங்கிய பாதார விந்தத்தினால் மனுஷியர் மாத்திரமல்லாமல் என்னையொத்த அனேகமான கொடிய அஃறிணைக் கூட்டங்களும் தருமத்தைப் பொருந்திய பதவியினை அடையுமென்று சொல்லுவதை மனசின்கண் சந்தேகமில்லாது தெளிந்துத் தங்களை எந்தக் காலம் பார்ப்பேனென்று நீண்டகால பரியந்தம் இவ்விடத்திலேயே கிடக்கின்றனன்.

 

779. பிறந்த நாட்டொடுத் திற்றைநாள் வரைக்குநும் பெயரை

    மறந்தி ருந்தநா ளறிகில னினைக்கிலென் மனத்தி

    லிறந்தி டாமுன மின்றுகண் டிடும்பல னெனைப்போ

    லறந்த வம்புரிந் தவர்களும் பெறுவதற் கரிதால்.

12

     (இ-ள்) அன்றியும், நான் இந்தப் பூமியின்கண் பிறந்த அன்று முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் உங்களுடைய நாமத்தை எனதிருதயத்தில் மறந்துவிட்டு இருந்த ஒரு தினத்தையாவது அறியமாட்டேன். ஆலோசித்துப் பார்க்குங் காலத்தில் இறந்து போகுவதற்கு முன் இன்றையத்தினம் தங்களைத் தெரிசித்திடும் எனது பிரயோசனத்தைப் போல புண்ணியத்தையும் தவத்தினையும் செய்தவர்களும் அடைவதற் கரிதாகும்.