| 
 முதற்பாகம் 
  
மென்னும் சஞ்சீவியினால்
போன உயிர் மீண்டும் வந்து பரவிடும் ஒப்பற்ற சரீரத்தை யுடையவர்களைப் போலாயினார்கள். 
  
1033. 
தருநிகர் கரத்தபீத்
தாலி பாகிய 
     குரிசி லுங்கதீ
சாவென்னுங் கோதையும் 
     வருமதிக் கின்புறு
மலர்க ளொப்பென 
     விருவரு முவகையிற்
களித்தி ருந்தனர். 
37 
     (இ-ள்) அன்றியும், கற்பகத்தருவை நிகர்த்த
கைகளையுடைய அபீத்தாலிபாகிய பெருமையிற் சிறந்தோர்களும் கதீஜாவென்று சொல்லும் பூமாலையணிந்த
கூந்தலையுடையவர்களும் உதயமாகி வரா நிற்கும் சந்திரனால் இன்பமடையும் ஆம்பன் மலரையும் குவளைப்
புஷ்பத்தையும் ஒப்பென்று சொல்லும்படி அவ்விரண்டு பேர்களும் சந்தோஷத்தினால் மகிழ்ச்சியுற்
றிருந்தார்கள். 
 |