|
முதற்பாகம்
காரணங்களெல்லாவற்றையும்
மைசறா வென்பவனால் ஒழுங்காக எழுதப்பட்ட அந்தக் கடிதமானது, பாயா நிற்கும் அலைகளையுடைய சமுத்திரத்தின்
கண்ணுண்டான அமுதத்தைப் போலும் இவ்வுலகத்தி லவதரித்த பசிய வளையல்களையுடைய அக்கதீஜா நாயகமவர்கள்
காய்ந்த அக்கினியின்கண் அகப்பட்ட மெழுகைப் போலத் தங்களின் கருத்தனாது சிதறிடும்படி
மாய்கின்ற துன்பத்திற்கு ஒப்பற்ற சஞ்சீவியை நிகர்த்தது.
1030.
விரைமல ருடுத்திகழ்
மேக வார்குழற்
கரியமை விழிக்கதீ
சாதங் கையினிற்
பிரிவுறா துறைந்தபத்
திரத்தைப் பெட்புட
னரசபித் தாலிபுக்
கனுப்பி னாரரோ.
34
(இ-ள்) அப்போது வாசனை தங்கிய மலர்களாகிய
நட்சத்திரங்கள் பிரகாசியா நிற்கும் மேகத்தைப் போன்ற நீண்ட கூந்தலையும் கரியமையினை
எழுதப்பெற்ற கண்களையுமுடைய கதீஜா நாயகமவர்கள் தங்களது கைகளினால் பிரிவுறாது அமர்ந்திருக்கும்
அந்தக் காகிதத்தை அன்போடும் அரசராகிய அபீத்தாலிபவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.
1031.
வந்தபத் திரந்தனை
வாங்கித் தன்னுயிர்ச்
சந்ததி விளைத்தகா
ரணத்தின் றன்மைநேர்ந்
திந்தநற் பதவிக
ளியன்ற தோவெனச்
சுந்தரப் புயவரை
துலங்க வீங்கினார்.
35
(இ-ள்) கதீஜாநாயக
மவர்களால் அவ்வாறு அனுப்பப்பட்டுத் தங்களிடத்தில் வரப்பெற்ற கடிதத்தை அபீத்தாலிபவர்கள்
தங்கள் கைகளினால் வாங்கித் தங்களின் உயிர் போன்ற சந்ததியாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் செய்த காரணத்தினது குணத்தைத் தங்களது மனத்தினால் உடன்பட்டு இந்த நல்ல
பதவிகள் பொருந்தினவோ? வென்று சொல்லி அழகிய தங்களினிரு தோள்களாகிய மலைகள் பிரகாசிக்கும்படி
பூரித்தார்கள்.
1032.
வியனுறு பத்திரம்
விளம்புஞ் செய்திகண்
டுயரபூத் தாலிபென்
றோது மன்னவர்
செயிரறு முகம்மது
வெனுஞ்சஞ் சீவியா
லுயிர்பரந் திடுவதோ
ருடலு மாயினார்.
36
(இ-ள்) அன்றியும், மேன்மை தங்கிய
அபீத்தாலிபென்று சொல்லும் அரசரானவர்கள் பெருமை பொருந்திய அந்தக் கடிதமானது கூறும் வர்த்தமானங்களைத்
தங்களின் கண்களினாற் பார்த்து குற்றமற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
|