பக்கம் எண் :

சீறாப்புராணம்

396


முதற்பாகம்
 

1026. முத்திரை தனைவிடுத் தெடுத்து மூரிவெண்

     பத்திரந் தனைவிரித் துவந்து பார்த்ததி

     னுத்தரந் தனையுணர்ந் தறிய வுள்ளமும்

     புத்தியுங் களித்துடல் புளகம் பூத்ததே.

30

     (இ-ள்) அவ்வாறு வருந்திய கதீஜாநாயகமவர்கள் அந்தக் கடிதத்தின் மேலே வைத்திருக்கும் முத்திரையைப் பிரித்து அதனுள்ளிருந்த பெருமை தங்கிய வெண்ணிறங் கொண்ட கடிதத்தைக் கைகளினால் உவப்புற்றெடுத்து விரித்துக் கண்களினாற் பார்த்து அதிலெழுதியிருந்த உத்தரத்தைத் தெரிந்தறியத் தங்களது மனமும் புத்தியுங் களிப்படைந்து சரீரமும் புளகம் பூத்தது.

 

1027. விரிதருங் காரணம் விளக்கி நற்புகழ்

     தெரிதர முகம்மதென் றெழுதுஞ் சித்திர

     வரிதொறு மிருவிழி வைத்து முத்தமிட்

     டுரியதம் முயிர்பெறு முவகை யாயினார்.

31

     (இ-ள்) அன்றியும், விரிந்த காரணங்களெல்லாவற்றையும் விளங்கும் வண்ணஞ் செய்து அந்த நல்ல கீர்த்தியானது தெரியும்படி நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மென்றெழுதாநிற்கும் அழகிய ஒவ்வொரு வரிகளிலும் இரண்டு கண்களையும் வைத்து முத்தமிட்டுத் தங்களது சொந்தமாகிய ஆவியைத் தாங்கள் பெற்றுக்கொள்ளும் விதமாக மனமகிழ்ச்சி யடைந்தார்கள்.

 

1028. உரைப்படுங் காரணத் துறுதி யாவையும்

     வரைப்புயன் மைசறா வரைந்த பத்திரந்

     திரைப்படுங் கடலிடை தியங்கு வார்க்கொரு

     கரைப்படுத் திடுமரக் கலத்தை யொத்ததே.

32

     (இ-ள்) அன்றியும், மலைபோலும் தோள்களை யுடைய மைசறாவென்பவன் சொல்லுதற் கரிய காரணத்தினது வலிமைக ளெல்லாவற்றையும் எழுதிய அந்தக் கடிதமானது, அலைகளையுடைய சமுத்திரத்தின்கண் அகப்பட்டுத் தியக்கமடைகிற அக்கதீஜாநாயகமவர்களுக்குக் கரையிற் சேரும்படி செய்யும் ஒப்பற்ற மரக்கலத்தை நிகர்த்தது.

 

1029. தூயவர் காரணந் தொகுத்த பத்திரம்

     பாய்திரை யமுதெனப் பிறந்த பைந்தொடி

     காய்கனன் மெழுகெனக் கருத்துச் சிந்திட

     மாய்வுறுந் துயர்க்கொரு மருந்தும் போன்றதே.

33

     (இ-ள்) அன்றியும், பரிசுத்தத்தை யுடையவர்களான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்