|
முதற்பாகம்
காதுகளில் புகுந்து
மனதின்கண் நுழைந்து மிகுத்த துன்பமாகிய ஊற்றைத் தோண்டி அதை ஆற்றினது பெருக்கமாக்கிப்
பின்னரும் ஒலியாநின்ற சமுத்திரத்தினது அகலமாக்கி அதிகரித்து எழும்பும்படி பெருகச் செய்தது.
1050.
செயிரறு கனவு
மிங்கு செப்பிய மொழியு மோலைப்
பயனுமுன் னணித்துக்
கண்ட பார்வையுங் கலந்தொன் றாகி
நயனுறு கதீசா
வுள்ள நடுக்கநெட் டுயிர்ப்பு மீறுந்
துயர்நெருப் பெழுக
மூட்டுந் துருத்தியின் வியத்த தன்றே.
17
(இ-ள்) அன்றியும், கதீஜா நாயக மவர்கள்
முன்னவர் கண்ட குற்றமற்ற சொப்பனங்களும் இவ்விடத்தில் உறக்கத்தும் சைமசாவென்பவனும்
சொல்லிய வார்த்தைகளும் பாசுரத்தின்கண் தீட்டப்பட்டிருந்த பயனும் முன்னர் நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தங்களது சமீபத்தில் பார்த்த பார்வையும் ஒன்றாகிச் சேர்ந்து
நன்மை பெற்ற அக்கதீஜா அவர்களின் மனதில் நடுக்கத்தையுடைய நெடுமூச்சு அதிகரியா நிற்கும் துன்பமாகிய
அக்கினியானது எழும்பும் வண்ணம் மூட்டா நிற்கும் துருத்தியைப் பார்க்கிலும் அதிகமாய் அதிசயமுற்றது.
1051.
வையகம் விளங்க
வந்த முகம்மதின் செவ்வி காண
வையமி லமரர்மாத
ரருந்தவம் புரிவ ரென்றாற்
செய்யகண் குளிரக்
கண்ட செழுமுகிற் கரிய கூந்தற்
றையற னுளத்தின்
காதற் பகுதியார் சாற்றற் பாலார்.
18
(இ-ள்) அன்றியும், இப்பூலோக முழுவதிலும்
பிரகாசிக்கும்படி உதயமாகி வந்த நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்
அழகைப் பார்ப்பதற்குச் சந்தேகமற்ற தேவமகளிர்களான கூறுல்ஈன்கள் அரிய தவத்தைச் செய்வார்களென்று
சொன்னால் சிவந்த இருகண்களும் குளிர்ச்சி யடையும்படி பார்த்த செழிய மேகத்தைப் போலுங் கரிய
கூந்தலையுடைய தையலாகிய கதீஜா நாயக மவர்களினது மனசின் கண்ணுள்ள ஆசையின் பிரிவைச்
சொல்லும் இயல்பினை யுடையவர்கள் யாவர்? ஒருவருமில்லர்.
1052.
பெருகிய துயர மென்னும்
பெருங்கட னீந்தி நீந்திக்
கரைபெறற் கரிதாய்ச்
சோர்ந்து கண்படை பெறாது வாடிப்
பருவரல் படர்ந்து
புந்திப் பயிரெனுங் கருத்தை மூடத்
திருமயி லின்பு
றாது சிலபகல் கழிந்த பிற்றை.
19
(இ-ள்) அவ்வாறாகிய அழகிய மயிலாகிய
கதீஜாநாயக மவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மீதுள்ள காதலினா லதிகரித்த
துன்பமென்று சொல்லும் பெரிய
|