|
முதற்பாகம்
தங்களி னிருகண்களும்
ஆசிக்கும்படி பார்த்து அவர்களின் இதயமானது முகமாகிய தாமரையினது பிரகாசத்துடன் விளங்கியது.
1088.
முன்னவர்தம்
முன்னேகிப் பின்னவரு
மிருகரங்கண்
முகிழ்த்துத் தாழ்த்துத்
தன்னிதய மலர்மொழித்தே
னாவழியே
யொழுகியவர்
செவியிற் சார
மன்னவர்மன் குவைலிதுதன்
மருங்கிருந்து
மணமொழியின்
வரலா றெல்லாஞ்
சொன்னதுவு மவன்மறுத்துச்
சொன்னதுவும்
விரித்தெடுத்துச்
சொல்லி னாரால்.
55
(இ-ள்) அந்நேரத்தில் ஹம்சா அவர்களும்
தங்களின் சேஷ்டரான அபீத்தாலி பவர்களின் முன்னர்ச்சென்று இரு கைகளையும் குவித்துப் பணிந்து
தங்கள் அகத்தாமரையின் வார்த்தைகளாகிய மதுவானது நாவினது பாதையாக ஒழுகி அவர்களின் காதுகறிற்
போய்ப் பொருந்த இராஜாதிபனான குவைலிதின் பக்கத்திலிருந்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் விவாகச் செய்தியின் வரலாரெல்லாவற்றையும் சொன்னதையும் அதற்கு அக்குவைலிது மறுத்து
சொன்னதையும் விரிவாக்கி எடுத்துச் சொல்லினார்கள்.
1089.
திருத்துணைவ
ருரைத்தமொழி யபித்தாலிப்
கருத்தூடு திளைப்ப
வாசிம்
பெருத்தகுலத் தவர்க்கோதிக்
குறைசிகளின்
முதியாரைப்
பெரிது கூட்டிப்
பொருத்தமிது நலதினத்தின்
முகுர்த்தமிது
வருகவெனப்
பொருவி லாத
குருத்தவள மணிமாலைக்
குவைலிதுபாற்
குறித்தெழுந்தார்
கொற்ற வேந்தர்.
56
(இ-ள்) அழகிய தங்களின் சகோதரரான ஹம்சா
அவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகள் அபீத்தாலி பவர்களின் கருத்தினகம் போய்ப் பெருக,
அதிகரித்த ஹாஷீம் குலத்தவர்க்கு இச்சமாச்சாரங்களைச் சொல்லி அதிகமாய்க் குறைஷிகளின் முதியவர்களைச்
சேர்த்து விவாகத்திற்குரிய பொருத்தமிது நல்ல தினத்தினது முகூர்த்தமிது வாருங்களென்று கூப்பிட
வெற்றியையுடைய வேந்தர்களான அவர்களியாவர்களும் மனசின்கண் மதிப்பிட்டுப் பிரகாசமானது குருக்கப்பெற்ற
இரத்தின மாலைகளையுடைய ஒப்பில்லாத குவைலி திடத்திற்கு எழும்பினார்கள்.
|