பக்கம் எண் :

சீறாப்புராணம்

419


முதற்பாகம்
 

சொல்லும் தமியேனாகிய யான்பெற்ற செல்வமானவரை, வாசனை மிகுந்த புஷ்பமாலை சூட்டி உங்களுடைய இடத்தில் தரும்படி எனது இருதயமானது எண்ணிற்று.

 

1086. எம்மனத்தி னுறுங்களிப்பு நுந்துணைவர்க்

        கியம்பிநும தினத்து ளானோர்

     தம்மனத்துக் கிசைந்தபடி நன்மொழிகள்

        சிலதெரிந்து சாற்றி வீறார்

     செம்மலிளங் களிறனைய முகம்மதையென்

        மருகனெனச் செவ்வி தாக்கி

     வம்மெனமற் புயத்தமுசா தமையனுப்பி

        யினிதிருந்தான் மதிவல் லோனே.

53

     (இ-ள்) ஆதலினால் எமது மனத்தின்கண் பொருந்திய சந்தோஷத்தை உமது சகோதரராகிய அபீத்தாலிபவர்களுக்குச் சொல்லி உம்முடைய கூட்டத்தி னகமானவர்களின் மனத்திற்கு இசையப் பெற்ற வண்ணம் நல்ல வார்த்தைகள் சிலவற்றை அறிந்தெடுத்துச் சொல்லிப் பெருமை தங்கிய செம்மலாகிய இளம் பருவத்தையுடைய யானை போன்ற முகம்மதென்பவரை எமது மருமகனென்று சொல்லும் விதம் செவ்வையாக்கி வாருமென்று வலிமை தங்கிய தோள்களையுடைய ஹம்சா அவர்களை அனுப்பி விட்டு அறிவினால் வல்லவனான குவைலிதென்பவன் இனிமையுடன் அங்கு தங்கியிருந்தான்.

 

1087. நினைத்தபடி முடிந்ததென மனத்தடக்கி

         யெழுந்தமுசா நெறியி னேகிச்

     சினத்தடக்கை மலையெனவுட் களிப்புமத

          மொழுகமணித் தெருவு நீந்திக்

     கனைத்தகடன் முகட்டெழுந்த கதிர்கடுப்ப

          வருவதுகண் கவர நோக்கி

     யினத்தவர்முன் னவரிதய முககமல

          நகையினொடு மிலங்கிற் றன்றே.

54

     (இ-ள்) அப்போது ஹம்சா அவர்கள் இருதயத்தில் எண்ணினபடி நிறைவேறிற்றென்று தங்களின் மனசின்கண் அடக்கிக் கொண்டு அவ்விடத்தைவிட்டும் எழும்பிப் பாதையின் கண் சென்று கோபத்தையும் பெரிய துதிக்கையையுமுடைய மலையாகிய யானையைப் போல அகத்தினிடத்துள்ள மகிழ்ச்சியாகிய மதமானது வெளியி லொழுகும் வண்ணம் இரத்தினவர்க்கங்கள் செறிந்த வீதிகளைக் கடந்து ஒலியா நிற்கும் சமுத்திரத்தினது உச்சியிலெழும்பிய சூரியனையொப்ப வருவதை அவர்களின் பந்துக்களும் அபீத்தாலிபு முதலிய தமயன்மார்களும்